அதிமுக ஆட்சியில் ராணி மேரி கல்லூரியை இடிக்க முயற்சித்தாங்க.. ஃப்ளாஷ்பேக்கை சொன்ன முதல்வர் ஸ்டாலின்.!
கல்லூரியின் பெயரைப் போலவே, கம்பீரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டிருக்கக்கூடி கல்லூரி இந்த கல்லூரி. இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்றும் தமிழகதத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் கொண்டது.
பெண்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் அல்ல, அடிப்படை உரிமை என ராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ராணி மேரி கல்லூரியின் 104 வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- கல்லூரியின் பெயரைப் போலவே, கம்பீரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டிருக்கக்கூடி கல்லூரி இந்த கல்லூரி. இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்றும் தமிழகதத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் கொண்டது.
இதையும் படிங்க;- பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி.. முக்கியப் பங்காற்றியது திராவிட இயக்கம்.. முதல்வர் ஸ்டாலின்
எத்தனையோ கலாச்சாரம், மத தடைகளை கடந்துதான் பெண் கல்வியில் தற்போதைய நிலையை எட்டி இருக்கிறோம். பெண்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் அல்ல, அடிப்படை உரிமை. பெண் முன்னேற்றத்துக்கு திமுக ஆட்சி காலத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு கலைஞர் அளித்தார். தற்போது 40 சதவீதமாக உள்ளது. காலப் போக்கில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கோரும் நிலைகூட ஏற்படலாம். புதுமை பெண் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் ராணி மேரி கல்லூரியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை உயர்வு. புதுமை பெண் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் 1039 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.
ராணி மேரி கல்லூரிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வாழ்நாளில் மறக்க முடியாதது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராணி மேரி கல்லூரியை இடிக்க முடிவு செய்யப்பட்டது. மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். போராட்டத்தை நடத்தியதால், அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்கு வரக்கூடிய குடிநீர் விநியோகத்தை நிறுத்தியது. கழிப்பறைகளை பயன்படுத்தக்கூடாது என்று தடையும் விதித்தது. அதை எதிர்த்து போராடிய கல்லூரி மாணவிகளுக்கு திமுக சார்பில் நேரில் ஆதரவு அளித்தேன். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக என்னை போலீசார் கைது செய்தனர். கல்லூரி மாணவிகளுக்காக ஒரு மாதம் சிறையில் இருந்தது மகிழ்ச்சிதான் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் வரலாம்.. ஆளுங்கட்சியை அலறவிடும் ஜெயக்குமார்..!