Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி..! நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனையா..?

இரண்டு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். அப்போது அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 

It is reported that West Bengal Chief Minister Mamata Banerjee has a chance to discuss the parliamentary elections with M K Stalin
Author
First Published Nov 2, 2022, 2:24 PM IST

சென்னையில் மம்தா பானர்ஜி

மணிப்பூர், மேற்கு வங்காள கவர்னராக உள்ள இல.கணேசனின் குடும்ப விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். இதேபோல் மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கும் இல.கணேசன் தனது அண்ணன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்தநிலையில் இன்று சென்னை வந்த மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திருமாவளவனை கைது செய்ய வேண்டும்..! மதம், சாதி மோதல் ஏற்பட்டால் தமிழக அரசே பொறுப்பு- பாஜக

It is reported that West Bengal Chief Minister Mamata Banerjee has a chance to discuss the parliamentary elections with M K Stalin

முதலமைச்சர் ஸ்டாலினோடு சந்திப்பு 

மம்தா பானர்ஜி ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு தற்போது நடைபெறக்கூடிய இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டில்  இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சந்திப்பை பல்வேறு அரசியல் கட்சியினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்..! குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கும் திமுக கூட்டணி எம்பிக்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios