தமிழகத்தில் மத துவேஷத்தை பரப்பி, சாதிய வேற்றுமைகளை உருவாக்கி பதட்டத்தை உருவாக்கி வரும் வி சி க தலைவர் தொல். திருமாவளவனைகைது செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 

திருமாவளவன் ஆவேசம்

தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார். கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவினரும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் தமிழக ஆளுநர் தி.மு.க ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவதும், தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் ஆளுநர் அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார். திராவிட இயக்கங்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும் விமர்சித்து இருந்தார். 

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்..! குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கும் திமுக கூட்டணி எம்பிக்கள்

 திருமாவளவனை கைது செய்திடுக

மேலும் சனாதானத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்எஸ்எஸ்ஐ அம்பலப்படுத்தும் முயற்சியாக நவம்பர் 6ம் தேதி மாநில முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார். மேலும், தமிழ்நாட்டிலும் பாஜக வாலாட்ட முயற்ச்சிக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக வால் ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம் என திருமாவளவன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

Scroll to load tweet…

தமிழக அரசே பொறுப்பு

தொடர்ந்து தமிழகத்தில் மத துவேஷத்தை பரப்பி, சாதிய வேற்றுமைகளை உருவாக்கி பதட்டத்தை உருவாக்கி வரும் வி சி க தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை கைது செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும். பெண்கள் மற்றும் சாதி குறித்து திருமாவளவனின் கருத்துக்களால் அமைதி பூங்காவான தமிழகத்தில் மத மற்றும் சாதிய மோதல்கள் உருவானால் அதற்கு தமிழக காவல் துறை மற்றும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் பாஜக வால் ஆட்டினால்! ஒட்ட நறுக்குவோம்! மத்தவங்க செய்றாங்களோ இல்லையோ நாங்க செய்வோம்!திமிரும் திருமா