ADMK vs BJP : 18 மாஜி அதிமுக எம்எல்ஏக்களை தட்டி தூக்கிய பாஜக... அவசரமாக டெல்லி சென்ற அண்ணாமலை- எடப்பாடி ஷாக்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  தமிழகத்தில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக மாஜி எம்பியை பாஜக தனது கட்சிக்கு இழுத்துள்ளது. 

It is reported that 18 former AIADMK MLAs will join BJP today KAK

பரபரக்கும் தமிழக தேர்தல் களம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் களத்தில் சூடு ஏறிவருகிறது. அந்த அளவிற்கு ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கும், தொகுதி சரியாக கிடைக்காத காரணத்தால் எதிர்கட்சிக்கும் கூட்டணி கட்சிகள் அல்லது எம்எல்ஏ, எம்பிக்கள் ஜம்ப் அடிப்படி போன்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசியல் களத்தில் கடந்த 5 வருடங்களாக கூட்டணியாக இருந்த அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், அந்த இரண்டு கட்சிகளும் தங்கள் தலைமையில் புதிய கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக பாமக மற்றும் தேமுதிகவிடம் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. 

திமிர்பிடித்த டி.ஆர்.பாலு: கொந்தளித்த அண்ணாமலை!

It is reported that 18 former AIADMK MLAs will join BJP today KAK

கூட்டணி பேச்சுவார்த்தை திணறும் கட்சிகள்

இது தான் தங்களுக்கான நேரம் என எண்ணிய அக்கட்சிகள் தங்களது தொகுதி தொடர்பான கோரிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாமக 12 தொகுதிகளையும், தேமுதிக 6 தொகுதிகளையும், தலா ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டுள்ளது. இதனால் பாஜக என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. இந்தநிலையில் பாஜக தேசிய தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு தமிழக கூட்டணி தொடர்பாகவும், பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி தமிழகம் வருவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதனிடையே அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்களை பாஜகவில் தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளது. 

It is reported that 18 former AIADMK MLAs will join BJP today KAK

அதிமுக நிர்வாகிகளை இழுத்த பாஜக

அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள், திமுகவை சார்ந்த ஒரு மாஜி எம்பியும் இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணையவுள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அண்ணாமலை இன்று மாலையே சென்னை திரும்பவுள்ளார். இதனிடையே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாஜி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்

அஜித் பவார் வசம் சென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி.. அண்ணன் மகனிடம் தோற்ற சரத் பவார்: தேர்தல் ஆணையம் உத்தரவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios