அமைதிப் பூங்காவாக தமிழகம் நிலவுகிறது என்று முதல்வர் கூறுவது வேடிக்கை.... அண்ணாமலை விமர்சனம்!!
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக ஆட்சியில், தற்போது தாலிக்கே பாதுகாப்பில்லாத நிலைமை நிலவுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக ஆட்சியில், தற்போது தாலிக்கே பாதுகாப்பில்லாத நிலைமை நிலவுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், 1998 ஆம் ஆண்டு, கோவை குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு, மலரஞ்சலி செலுத்தினேன். எளிய மக்கள் உயிரைப் பறித்த தீவிரவாதம், இம்மண்ணில் இனி எப்போதும் தலையெடுக்கக் கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியுடன் இருக்கிறது.
இதையும் படிங்க: ஈரோட்டில் பணத்திற்கும் தன்மான மிக்க தமிழ் இனத்திற்கும் போட்டி... பிரச்சாரத்தில் சீமான் அனல் பறக்கும் பேச்சு!!
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத் தூண் அமைக்கப்படும் மற்றும், குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு, 1998 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக ஆட்சியில், தற்போது தாலிக்கே பாதுகாப்பில்லாத நிலைமை நிலவுகிறது.
இதையும் படிங்க: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
2019 ஒப்பிடும்போது 2021ல் கொள்ளை, கொலைகள், திருட்டுக் குற்றம் அதிகரித்துள்ளது. காவல்துறையைச் செயல்பட விடாமல் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள்.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பான என்ஐஏ கைதுகள் நடக்கும்போது, தமிழகம் அமைதிப் பூங்காவாக நிலவுகிறது என்று முதலமைச்சர் கூறுவது வேடிக்கை என்று தெரிவித்துள்ளார்.