பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை மேற்கொள்ளும் ஆய்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை மேற்கொள்ளும் ஆய்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதுமட்டுமின்றி பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த கலவரம் அந்த சமயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பிபிசி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்து. இந்தியா தி மோடி குவெஸ்டீன் என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிட்டது.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் செய்ய திட்டமா.? செயற்கையாக காலதாமதம் செய்யப்படுகிறதா.? சீமான் ஆவேசம்
இந்தியா தி மோடி குவெஸ்டீன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனிடையே மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களின் செல்போன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிபிசி அலுவலங்களில் வருமான வரித்துறை மேற்கொள்ளும் ஆய்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், துடிப்பான ஜனநாயகத்துக்கு வெளிப்படையான, சுதந்திரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை.
இதையும் படிங்க: ஈரோட்டில் பணத்திற்கும் தன்மான மிக்க தமிழ் இனத்திற்கும் போட்டி... பிரச்சாரத்தில் சீமான் அனல் பறக்கும் பேச்சு!!
எனினும் பாஜக ஆட்சியில், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை அதிகாரத்தை இழந்துள்ளன. அரசியல் எதிர்களை குறிவைத்து சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்றவை கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் எதிர்களை குறிவைக்கும் பட்டியலில் பிபிசியில் நடத்தப்படும் வருமான வரித் துறை சோதனையும் சேர்ந்துள்ளது. இந்திய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அழிவுக்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களே காரணம். இதனை அமைதியாக கண்காணித்து வரும் மக்கள், வருகின்ற தேர்தலில் தகுந்த பாடம் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.