ஈரோட்டில் பணத்திற்கும் தன்மான மிக்க தமிழ் இனத்திற்கும் போட்டி... பிரச்சாரத்தில் சீமான் அனல் பறக்கும் பேச்சு!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணத்திற்கும் தன்மான மிக்க தமிழ் இனத்திற்கும் போட்டி நடப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

competition between money and prestigious tamilans in erode says seeman

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணத்திற்கும் தன்மான மிக்க தமிழ் இனத்திற்கும் போட்டி நடப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்தந்த கட்சி வேட்பாளர்கள் மிக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், புரட்சி ஒன்று தான் எல்லாவற்றையும் புரட்டிபோடும் ஆற்றல் பெற்றது. நாங்கள் நிற்பது ஆள் மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு அள்ள அடிப்படை மாற்றம். அரசியல் மாற்றம் செய்ய, கொடுங்கோல் ஆட்சிகளை வீழ்த்த புரட்சி செய்ய வேண்டும், நாங்கள் கட்டிய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வரவில்லை. கட்டிய கட்டடத்தை இடித்து விட்டு மீண்டும் கட்ட வருகின்றோம். இந்த தேர்தலில் பணத்துக்கும் பணத்துக்கும் சண்டை நடக்கிறது. அதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், பல லட்சம் கோடி கொள்ளையடித்து பெறுத்து, கொழுத்த முதலைகள் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் செய்ய திட்டமா.? செயற்கையாக காலதாமதம் செய்யப்படுகிறதா.? சீமான் ஆவேசம்

அதிமுக வெற்றியடைந்தாலும் திமுக வெற்றியடைந்தாலும் ஒரு மாற்றமும் வராது. ஆனால் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி. உலகம் திரும்பி பார்க்கும், நல்லதை தேடி பார்க்க வேண்டும். அவர்கள் பின்னால் அமைச்சர்கள் ஆட்சி அதிகாரம் உள்ளது. ஆனால் எங்களுக்கு மக்களை தவிற யாரும் இல்லை. மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கின்றோம். மாற்றத்தை ஏற்படுத்தப் போறோம் என்று நின்றவர்கள் எல்லாம் இப்போது தொடை நடுங்கி எங்கே போய் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு தோல்வியை கண்டு அவர்கள் துவண்டு போய்விட்டனர். நாங்கள் புலிகளின்  பிள்ளைகள், சோர்ந்து போகிறவன் போவான், புதிதாக சேருபவன் சேருவான். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. யானையின் பலம் தும்பிக்கை மனிதனின் பலம் நம்பிக்கை. நம்பிக்கை கொண்டவர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை. ஆழமான மக்கள் மீது நம்பிக்கை கொண்டு தேர்தலை சந்திக்கின்றோம்.

இதையும் படிங்க: ஸ்டாலினை பின்னுக்கு தள்ளினாரா ஈபிஎஸ்.? ஈரோடு தேர்தலில் வெற்றி யாருக்கு.? கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

அதிமுக, திமுக வெல்லும் போது மக்கள் தோற்று தான் போனார்கள். நல்ல ஆட்சி கொடுத்தால் ஏன் வாக்குக்கு காசு கொடுக்க வேண்டும்? ஓட்டுக்கு காசு வாங்கும் ஏழ்மை நிலையில் மக்களின் வாழ்க்கை தரம் இருக்க கூடாது என்பது நாங்கள் நினைக்கிறேன். வீட்டுக்கு காசு கொடுப்பது தங்கத்தை தவுட்டுக்கு வாங்கினார்கள் என்று அண்ணா விமர்சித்தார். ஆனால் அண்ணா பெயரின் கட்சி நடத்துபவர்கள் தற்போது மக்கள் வாக்கான தங்கத்தை தவுட்டுக்கு வாங்குகிறார்கள். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க கை கொடுத்த கைதான் இந்த கை. அந்த அந்த கையிக்கா வாக்களிக்க போகிறீர்கள் அவர்கள் நிற்பது பணத்தை பாதுகாக்க, நாங்கள் நிற்பது இனத்தைச் பாதுகாக்க, பணத்திற்கும் தன்மான மிக்க தமிழ் இனத்திற்கும் போட்டி நடக்கிறது. திமுக அதிமுக ஒரு மாற்றமும் இல்லை கொடி தான் மாற்றாக உள்ளது. அங்கு அண்ணா உள்ளார். இங்கு அண்ணா இல்லை, அவர்களுக்கு கோட்பாடு இல்லை என்று விமர்சித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios