ரஜினி ஆசீர்வாதத்தினால்தான் நான் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன்.. அர்ஜூன மூர்த்தி அதிரடி.
ரஜினிகாந்த் ஆசீர்வாதத்துடன் தான் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன் என்ன அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார், இது பாஜக மற்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் ஆசீர்வாதத்துடன் தான் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன் என்ன அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார், இது பாஜக மற்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியில் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ரஜினி பின்வாங்கிய நிலையில் அர்ஜுன மூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியலுக்கு இதோ வருகிறேன் ,அதோ வருகிறேன் என பல ஆண்டுகளாக தனது ரசிகர்களை ஏமாற்றி வந்த ரஜினிகாந்த், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திடீரென கட்சி அறிவிக்கப் போவதாககூற அதற்கான வேலைகளில் இறங்கினார், மாநிலம் முழுவதும் கட்சிக்கு அதிமுக திமுகவைப் போல அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கூறி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார், நிர்வாகிகளை அழைத்து அடிக்கடி ரகசிய கூட்டங்கள் நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் எதிர்பார்த்ததைப் பொலவே கட்சிக்கு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது இனி தேர்தலில் இறங்க வேண்டியதுதான் என அவரசு ரசிகர்கள் கூறி வந்தனர்.
இதையும் படியுங்கள் t raja singh: BJP: நபிகள் நாயகம் அவதூறு: பாஜக அதிரடி நடவடிக்கை! தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் சஸ்பெண்ட்
அவரின் இந்த வேகம் அவர து ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில்தான் கட்சிக்கு ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பாளராக வரப்போகிறார் என்று கூறப்பட்டு வந்தது, ஆனால் திடீரென பாஜகவின் அறிவுசார் அணியின் தலைவராக இருந்த அர்ஜுன மூரத்தி பாஜகவில் வகித்து வந்த கட்சிப் பதவிகளை உதறிவிட்டு, ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு வந்தார். அப்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று அர்ஜுன மூர்த்தியை ரஜினி அறிமுகம் செய்தார், முதல் கூட்டத்திலேயே இவர்தான் என் சொத்து என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
இதையும் படியுங்கள்: திமுக மட்டுமே அறிவார்ந்த கட்சி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்..! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்
உண்மையிலேயே ரஜினியின் கட்சிக்கு எல்லாமுமாக அர்ஜூன மூர்த்திதான் இருக்கப் போகிறார், அர்ஜுன மூர்த்திதான் ரஜினியின் அரசியல் வாரிசாக இருக்கப் போகிறார் என்று அப்போது பலரும் ஆச்சரியமடைந்தனர், ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார், அடுத்த முதல்வர் ரஜினிகாந்த்தான், திமுகவின் கதை குளோஸ், ஸ்டாலின் ஜாதகத்தில் கட்டம் சரியில்லை, அவர் முதலமைச்சராகவே முடியாது என பாஜக அதிமுகவினர் பேசி வந்தனர். இந்நிலையில்தான் நடிகர் ரஜினி திடீரென அரசியலில் இறங்கும் அளவிற்கு உடல் ஒத்துழைக்கவில்லை, மருத்துவ காரணங்களில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல அர்ஜுன மூர்த்திக்கும் பேரிடியாக விழுந்தது. ஆட்சி அமைக்கப்போகிறார், தமிழ்நாட்டை ஆளப்போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவரை நம்பி வந்தவர்கள் அனைவரும் ஆடிப்போயினர், இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அர்ஜுன மூர்த்தி சில காலம் அமைதியாக இருந்தார், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார், ரஜினி ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என அவர் எதிர்பார்த்தார், ஆனால் அது நடைபெறவில்லை, வேறு வழியில்லாமல் இந்நிலையில்தான் அவர் பாஜகவிலேயே தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில்தான் பழைய குருடி கதவை திறடி என்பதுபோல பாஜகவின் அறிவுசார் அடியில் சேர்ந்துள்ளார், ஆனால் இதுவரை அவருக்கு பதவிகள் வழங்கவில்லை, ஏற்கனவே மாநில தலைவராக அவர் பதவி வகித்து வந்த நிலையில் அந்த பதவி வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது, எனவே மாநில தலைவர் பதவி அவருக்கு கிடைப்பது கேள்விக்குறிதான்,
இந்நிலையில்தான் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவைலில் இணைந்து கொண்டார், பின்னர் அவர் அளித்த பேட்டியில், ரஜினி ஆசிர்வாதத்தால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன், அண்ணாமலை வேகம், வீரியம் மிக்கவராக உள்ளார், ரஜினிகாந்திடம் தெளிவான சிந்தனை, தொலைநோக்கு பார்வை இருந்தது. எப்போதும் ரஜினி ஒரு கருத்தைக் கூற நினைத்தால் அது வெளிப்படையாக கூறி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.