திமுக மட்டுமே அறிவார்ந்த கட்சி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்..! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

கிராம்புற மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவது அவர்கள் கல்வி கற்று பயனடைய, எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என கூறவில்லை,  சாதாரண குடிமக்கள் கூட இதன் வேறுபாட்டை அறிவர் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

 

The Chief Justice of the Supreme Court said that DMK should not be thought of as the only intellectual party

தேர்தல் இலவசம்- நீதிமன்றத்தில் வாதம்

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் இன்று விசாரணை வந்தது, அப்போது பேசிய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் பிரச்சனை இருப்பதை யாரும் மறுக்க முடியாது, இந்த விவகாரம் கொள்கை சார்ந்த விவகாரம் அதனால் தலையிட முடியாது என கூற முடியுமா? உதாரணமாக ஏதாவது சட்டம் இயற்றப்படும்போது அதனை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா ? என வினவியதோடு  இந்த தேர்தல் இலவசங்கள் விவகாரம் தொடர்பாக இங்கு விவாதிப்போம் , அது தொடர்பாக அனைத்து தரப்பு கருத்தையும் கேட்போம், பின்னர் முடிவு செய்யலாம்  என தெரிவித்தார். இதனையடுத்து பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த விவகாரத்தில் முதலில் பொருளாதார நிலை தொடர்பாக நாம் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  ஏனெனில் இலவசங்கள் அறிவிப்பால் கடும் பாதிப்புக்குள்ளாவது பொருளாதாரம் தான் என கூறினார். அதற்கு தலைமை நீதிபதி தேர்தல் இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று தான் பா.ஜ.க, காங்கிரஸ் என அனைத்து கட்சியினரும் இலவசம் வேண்டும் என்ற மன நிலையிலேயே உள்ளனர். எனவே இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் தற்போதைய மனுவை ஒரு காரணியாக எடுத்து, அனைத்து கோணங்களிலும், அனைத்து விதத்திலும் விவாதிப்போம் என கூறினார். 

The Chief Justice of the Supreme Court said that DMK should not be thought of as the only intellectual party

மின்சாரம் இலவசம்- மின் கழகம் பாதிப்பு

அப்போது வாதிட்ட மத்திய அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல், இலவசம் அறிவிப்பு விவகாரத்தில் பல்வேறு category உள்ளன. குறிப்பாக ஒரு கட்சி சேலை, இலவச கலர் டிவி தருவதாகவும், இலவச மின்சாரம் வழங்குவதாகவும் அறிவிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பு  வரி செலுத்தும் மக்களின் தலையில் விழுகிறது, எனவே தான் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக இலவச மின்சார அறிவிப்பு விவகாரத்தால் மின் கழகங்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றன, மேலும் , டெல்லி முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யும் அளவிற்கு நிலைமை உள்ளது என கூறினார் . அப்போது, தலைமை நீதிபதி,  இலவசம் விவகாரத்தில் தேர்தல் சமயத்தில் அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளும். ஆனால் மொத்தமாக பிற நேரத்திலும் இலவசம் அறிவிப்பு என்பதை தான் நாம் முக்கியமான விசயமாக எடுத்து கொள்ள வேண்டும். இலவசங்கள் வழங்குவது என்பது ஒரு முக்கியமான பிரச்சனை இதுகுறித்து நிச்சயமாக விவாதம் என்பது தேவை.  மாநிலங்கள் இலவசங்களை வழங்க முடியாது என மத்திய அரசு ஒருவேளை சட்டம் இயற்றுவதாக வைத்துக் கொள்வோம் அத்தகைய சட்டம் சரியானதா? இல்லையா? என்பதை நீதித்துறை ஆய்வுக்கு உரியது அல்ல என உங்களால் சொல்ல முடியுமா எனவே நாட்டின் நலனுக்காக தான் இந்த பிரச்சினையை கேட்கிறோம் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.  

அதிமுக, பாஜக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்

The Chief Justice of the Supreme Court said that DMK should not be thought of as the only intellectual party

 திமுக மட்டும் புத்திசாலித்தனமான கட்சியா..?

ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்கும்? இந்த விவகாரத்தில் தேர்தல் இலவசம் என்பதை அனைத்து தரப்பும் ஒரு பிரச்சனையாக கருதுகிறீர்கள்?ஆனால் தேர்தல் இலவசத்தை தாண்டி அரசின் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது அதுவும் கவனிக்கப்பட வேண்டியது, சரிபடுத்தப்பட வேண்டியது ஆகும், எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை இரண்டையும்  பிரித்து பார்க்க முடியாது எனவே தான் இந்த இலவசங்கள் விவகாரத்தை கையில் எடுக்கும்போது அதன் மூலம்  பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என நினைத்தோம், மேலும் இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில் ஒரு ஆணையம் அமைக்கலாம் என நினைத்தோம், ஏனெனில் இலவசங்கள் அறிவிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தால் அதற்கு இந்த ஆணையம் உதவிகரமாக இருக்கும் என கூறினார். அந்நேரத்தில் தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தனது தரப்பு வாதத்தை வைக்க முற்பட்டார். அப்போது தலைமை நீதிபதி தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் இந்த வழக்கில் நீங்கள் ஆதரவாக களமிறங்கும் தி.மு.க கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம்.  எனக்கு இது தொடர்பாக  பல விசயங்கள் கூற வேண்டியுள்ளது. மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டும் அது குறித்து பேசாமல் தவிர்ப்பதால் அவற்றை குறித்து அறியாமல் இல்லை என்று நினைக்க வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார். 

The Chief Justice of the Supreme Court said that DMK should not be thought of as the only intellectual party

அண்ணாமலைக்கு செம்ம ஷாக்.. காலியாகும் பாஜக கூடாரம், திமுகவுக்கு எஸ்கேப் ஆன முக்கிய புள்ளி.. தாமரை மலராதாம்

The Chief Justice of the Supreme Court said that DMK should not be thought of as the only intellectual party

டிவி விவாதத்தில் பிடிஆர் பேச்சு

இதனைதொடர்ந்து பேசிய இலவசங்களுக்கு எதிரான தரப்பு மூத்த  வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் :- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உச்சநீதிமன்றம் குறித்த தமிழக நிதியமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.  இதனையடுத்து தலைமை நீதிபதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்துக்கு  கால்நடை வழங்குவது அவர்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றவே, அதேபோல கிராம்புற மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவது அவர்கள் கல்வி கற்று பயனடைய, எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என கூறவில்லை,  மேலும் இலவசங்கள் மற்றும் நலத்திட்டங்களையும் அதன் வேறுபாட்டையும் நாங்களும் அறிவோம் சாதாரண குடிமக்கள் கூட இதன் வேறுபாட்டை அறிவர் என தெரிவித்தார்மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளையும் தொடரும் என தெரிவித்து , வழக்கை தலைமை நீதிபதி  ஒத்திவைத்தார்.

இதையும் படியுங்கள்

மதுரையில் இருந்து விமானம் மூலம் ஆன்மிக பயணம்..! 6 நாட்கள் சுற்றுலாவிற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா..?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios