Asianet News TamilAsianet News Tamil

பாஜகவில் உழைத்தவர்களுக்கு பதவி இல்லை...! பணம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு...? அண்ணாமலையை அலற விடும் மைதிலி வினோ

பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலையடுத்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கோவை மாவட்ட தலைவர் மீது மைதிலி கடும் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
 

BJP State Women Team Secretary will join DMK tomorrow in the presence of Chief Minister Stalin
Author
Kovai, First Published Aug 23, 2022, 1:12 PM IST

திமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுக்களை அண்ணாமலை தெரிவித்து வருகிறார். இதனையடுத்து திமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து தற்போது பாஜக நிர்வாகிகளை திமுக இழுத்து வருகிறது. கடந்த வாரம் மதுரை மாநகர மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகினார். விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாஜக மாநில மகளிர் அணி செயலாளராக உள்ள மைதிலி வினோ திமுகவில் இணையவுள்ளதாக தற்போது  தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொள்ளாட்சியில் இன்று நடைபெறவுள்ள திமுக கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு வந்தார்.

அமித்ஷாவுடன்- ஸ்டாலின் அடுத்த மாதம் சந்திப்பா..? கண்டிப்பாக இதை பற்றி பேச வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

BJP State Women Team Secretary will join DMK tomorrow in the presence of Chief Minister Stalin

பாஜகவை மக்களுக்கு தெரியாது

 அப்போது மாற்று கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் யார் திமுகவில் இணையவுள்ளார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பொறுத்திருந்து பாருங்கள் என செந்தில் பாலாஜி பதில் அளித்திருந்தார். இந்தநிலையில் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் மைதிலி வினோவை கட்சியில் இருந்து நீக்குவதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பதில் அளித்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட மைதிலி வினோ, பாரதீய ஜனதா கட்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மை காலமாக பாஜகவின் மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உண்மையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார். மேலும் பாஜகவில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியை கட்டமைத்தவர்களில் எனது பங்கு அலாதி என்பது தாங்கள்  அறியாததே என கூறியுள்ளார்

கோவைக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.! திமுகவில் இணையவுள்ள அதிமுக, பாஜக முக்கிய பிரமுகர்கள் யார் தெரியுமா..?

BJP State Women Team Secretary will join DMK tomorrow in the presence of Chief Minister Stalin


பாஜகவிற்கு வந்த உடன் மாவட்ட தலைவர் பதவியை பிடித்ததால் அடிப்படை என்ன என்பது தெரியாமல் இருப்பது நியாயம் தான். பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலையல்லவா நிலவுகிறது. ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால், நாளை ஒருவர் 320 கோடி சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா? இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையிலிருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது? என்னை போன்ற உண்மை விசுவாசிகள் பலரும் தங்களது தவறான ஏதேச்சதிகார போக்கால் சுயமான முடிவெடுக்க துவங்கியுள்ளனர் என்பது தெரியுமா தங்களுக்கு? கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்து புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் தங்களை போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ள வரை இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை. தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின்  செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு செல்ல தயாராகி விட்டனர். எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம்” எனத் தெரிவித்துள்ளார். மைதிலி வினோவின் குற்றச்சாட்டு பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சுற்றுபயணம் செய்து வரும் நிலையில், மைதிலி வினோ இன்று மலை பொள்ளாட்சியில் நடைபெறும் விழாவில் திமுகவில் இணையவுள்ளார். இதே போல கோவை மற்றும் பொள்ளாட்சி பகுதியை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுக, பாஜக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்

 

Follow Us:
Download App:
  • android
  • ios