கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.! திமுகவில் இன்று இணையவுள்ள அதிமுக, பாஜக முக்கிய பிரமுகர்கள் யார் தெரியுமா..?
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
கோவைக்கு செல்லும் ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. திமுகவின் வெற்றிக்கு தென் மண்டலம் முக்கிய காரணமாக இருந்ததாக பார்க்கப்பட்ட நிலையில், கொங்கு மண்டலம் முற்றிலுமாக கை விட்டது. கொங்கு பகுதிகளான கோவை, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திமுகவுக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியிடம் திமுக தோல்வி அடைந்தது. இதேபோல், தருமபுரியில் உள்ள 5 தொகுதிகளையும் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும் திருப்பூரில் 8ல் 5 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இதன் காரணமாக கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்ற திமுக தலைமை முடிவு செய்தது. இதனையடுத்து கோவை திமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சனையை சரி செய்ய தீர்மானித்தது.
அவரை பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்… அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!!
ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
இதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை பகுதிக்கு பொறுப்பாளராக மு.க.ஸ்டாலின் நியமித்தார். இதனையடுத்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சியில் 66 இடங்களில் 62 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. கோவையை தங்கள் கோட்டையாக வைத்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு பின்னடைவாகவே கருதப்பட்டது. இதனையடுத்து கோவையை தங்கள் வசப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15 மாதங்களில் 4 முறைக்கு மேல் கோவை பகுதிக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் இன்று மாலை விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர் 24 ந்தேதி, கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சனாரி பகுதியில் மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்குகிறார். அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து, 641 பேருக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். மேலும், 761 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மாலையில் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மாற்று கட்சியினர் 50 ஆயிரம் பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.
அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணை... ! இபிஎஸ் சாதிப்பாரா..? சறுக்குவாரா..?
திமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்
பொள்ளாட்சியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில், மாற்று கட்சியை சேர்ந்த ஏராளமானோர் இணையும் நிலையில் கோவை மண்டலத்தை சேர்ந்த அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்று கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் கோவை பகுதியை சேர்ந்த பாஜக முக்கிய நிர்வாகி மைதிலி வினோ திமுகவில் இணைய இருப்பதாக தற்போது தகவல் வெளியானது. இதனையடுத்து கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால் பாஜகவில் இருந்து மைதிலி வினோ நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதே போல அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகியும் நாளை நடைபெறவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மைதிலி வினோ வெளியிட்டு முகநூல் பதிவில் பாஜகவில் பணம் இருந்தால் மட்டுமே பதவி வழங்கப்படுவதாகவும், உழைப்புக்கு மரியாதை இல்லையென தெரிவித்துள்ளார். மேலும் இப்படி பட்ட நிலை தொடர்வதால் தாமரை மலர்வதற்க்கு வாய்ப்பு இல்லையென கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
அமித்ஷாவுடன்- ஸ்டாலின் அடுத்த மாதம் சந்திப்பா..? கண்டிப்பாக இதை பற்றி பேச வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்