வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாக அதிமுக கூறுவது பொய்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து!!

திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாக அதிமுக கூறிவருவது பொய்யான குற்றாச்சாட்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

It is a lie that dmk is locking up voters says minister udayanidhi stalin

திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாக அதிமுக கூறிவருவது பொய்யான குற்றாச்சாட்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்குவதை அடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுமிகள் புதை மணலில் சிக்கி பரதாமபாக பலி

பின்னர் பரப்புரை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுகவினர் கொலுசு கொடுத்து வாக்கு சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள். திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாக அதிமுக கூறிவருவது பொய்யான குற்றாச்சாட்டு.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு

கமலுக்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறாது என அதிமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதனை பொருத்து இருந்து பாருங்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அண்ணாமலையிடம் கேளுங்கள் என தமிழிசை கூறுகிறார். அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்குக்கும் என்ன சம்பந்தம்? என்று விமர்சனம் செய்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios