Asianet News TamilAsianet News Tamil

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஐகோர்ட் தடை... அப்பாடா என பெரூமூச்சு விடும் திமுக அமைச்சர்..!

கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. 

Interim stay on Enforcement Directorate inquiry against Minister Anitha Radhakrishnan
Author
First Published Dec 16, 2022, 6:49 AM IST

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

இதையும் படிங்க;- இதே பொழப்பா வச்சிட்டு இருக்கீங்க.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை லெப்ட் ரைட் வாங்கி கதறவிட்ட உச்சநீதிமன்றம்.!

Interim stay on Enforcement Directorate inquiry against Minister Anitha Radhakrishnan

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துவிட்டதால், அந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என வாதிடப்பட்டது.

Interim stay on Enforcement Directorate inquiry against Minister Anitha Radhakrishnan

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி, மறு உத்தரவு வரும்வரை அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க;-  கதறியவர்களுக்கு தெரியும்.. ஸ்டாலினை விட மிகவும் டேஞ்சரஸ் உதயநிதி.. கரு. பழனியப்பன்..!

Follow Us:
Download App:
  • android
  • ios