கதறியவர்களுக்கு தெரியும்.. ஸ்டாலினை விட மிகவும் டேஞ்சரஸ் உதயநிதி.. கரு. பழனியப்பன்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறியிருந்தார்.

Udhayanidhi is more dangerous than Stalin... karu palaniappan

அமைச்சராக  பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் கரு. பழனியப்பன், ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர் என குறிப்பிட்டுள்ளார். 

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்றது. எனினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. இந்நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமாக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் நேற்று இளைஞர் நலன் விளையாட்டுத்துறை சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை ஒதுக்கப்பட்டது. 

Udhayanidhi is more dangerous than Stalin... karu palaniappan

முதலமைச்சர் உள்பட 34 அமைச்சர்கள் உள்ள நிலையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் கூட்டணி கட்சிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் குடும்ப அரசியல் என்று விமர்சங்களும் எழுந்து வருகின்றன. 

Udhayanidhi is more dangerous than Stalin... karu palaniappan

இந்நிலையில், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் கரு. பழனியப்பன் ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கருணாநிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின் என்று கதறியவாளுக்கு தெரியும், ஸ்டாலினை விட ஆபத்தானவர் உதயநிதி என்று. கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே என பதிவிட்டுள்ளார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios