Asianet News TamilAsianet News Tamil

திமுக முன்னாள் சபாநாயகர் வீட்டை சுற்றி வளைத்து சோதனை.!பணம் கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்பிய வருமான வரித்துறை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் திமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டல் நடைபெற்ற சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Income Tax department raids the house of Nellai DMK district secretary Avudayappan KAK
Author
First Published Apr 5, 2024, 9:53 AM IST | Last Updated Apr 5, 2024, 9:53 AM IST

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சிகளின் சாதனைகளையும், எதிர்கட்சிகளை விமர்சித்தும் பொதுமக்களிடம் வாக்குகளை கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை தீவிரம் காட்டி வருகிறது. வாக்கப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

Income Tax department raids the house of Nellai DMK district secretary Avudayappan KAK

திடீர் சோதனையில் ஐடி

மேலும் நேர்மையான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வருமான வரித்துறை, அமலாக்கத்துறையோடு இணைந்து பணம் பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. இதற்காக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் படி வருகின்ற புகார்களையடுத்து தீவிர சோதனையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் வட சென்னையில் உள்ள 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதனை தொடர்ந்து கோவை சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் டாக்டர்.முத்தூஸ் என்ற பெயரில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள்  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில்  வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் மருத்துவமனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Income Tax department raids the house of Nellai DMK district secretary Avudayappan KAK

திமுக நிர்வாகி வீட்டில் சோதனை

இந்தநிலையில், வாக்காளர்களுக்குபணம் கொடுக்க திமுக நிர்வாகிகள் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து , கடந்த 2006 ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. தற்போது ஆவுடையப்பன் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். நேற்று இரவு அவரது இல்லத்தில் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது திமுகவின் பாக முகவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட ஆவணங்கள் கண்டறியப்பட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் ஆவுடையப்பன் வீட்டில் இருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

Annamalai : தமிழகத்திற்கு தேவையில்லாத ஆணி திமுக.. ஊழல் குற்றச்சாட்டில் 11 அமைச்சர்கள்- விளாசும் அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios