தமிழகத்தில் சமூக நீதி கடைபிடிக்காமல் சமூகநீதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி வருபவர் முக.ஸ்டாலின் எனவும் 35 அமைச்சர்களில் இரண்டு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் யாரும் இல்லையென அண்ணாமலை தெரிவித்தார்.  

திமுகவின் வாரிசு அரசியல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து சேலம் மாநகரம் அம்மாபேட்டை பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் தலைவர்கள் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள்.

குறிப்பாக முக.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், முரசொலி மாறனின் மகன் தயாநிதி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி, தங்கம் தென்னரசுவின் தங்கை தமிழச்சி தங்கபாண்டியன்,துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் என முதன்மையான தலைவர்கள் அனைவரின் வாரிசுகளும் திமுகவில் அடுத்தடுத்த பதவியில் வகித்து வருகின்றார்கள்.ஆனால் மொழிப்போர் தியாகிகள் என இருந்தவர்களின் வாரிசுகள் இன்று என்ன நிலையில் உள்ளார்கள் என சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டில் 11 அமைச்சர்கள்

தமிழகத்தில் சமூக நீதி கடைபிடிக்காமல் சமூகநீதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி வருபவர் முக.ஸ்டாலின் எனவும் 35 அமைச்சர்களில் இரண்டு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் யாரும் இல்லை இவர்கள்தான் சமூக நீதி ஆட்சியை நடத்துகிறார்களா என கேள்வி எழுப்பினார். தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக அரசு தேவையில்லாத ஆணி என விமர்சனம் செய்த அண்ணாமலை,

 தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது எனவும் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொச்சைப்படுத்தி பேசும் நிலை தமிழக அமைச்சர்களிடம் உள்ளது என தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்ட பாஜக அரசாங்கம் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக தெரிவித்தவர், அதனை பட்டியலிட்டார். மேலும் பல கோடி ரூபாயை தமிழக மக்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய மகத்தான கட்சி பாரதிய ஜனதா கட்சி என பெருமையுடன் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க சொன்னால் சரக்கு பாட்டிலுக்கு தமிழில் பெயர் வைக்கிறார்கள்; முன்னாள் அமைச்சர்

பாஜகவின் திட்டங்கள்

திராவிட முன்னேற்ற கட்சியில் உள்ளவர்கள் பணத்தை அமுக்கும் சேவை மட்டுமே செய்து வருகின்றனர். அவர்களின் கஜானாவை நிரப்ப பாஜக அரசு முன்வராது பொதுமக்களின் வங்கி கணக்கிலேயே அனைத்து பண பலன்களும் கிடைக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது வேடிக்கையான ஒன்று எனவும் பிரதம மந்திரியின் காலணியின் அழுக்கிற்கு கூட ஒப்பில்லாதவர் என அண்ணாமலை தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டிக்கு மட்டும் 942 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் வீடு கட்டத் திட்டம், முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த கட்சி பாரதிய ஜனதா கட்சியின் அரசு எனவும்,கடந்த பத்து ஆண்டுகளில் அரசின் திட்டங்கள் மக்களிடம் நேரடியாக செல்ல காரணமாக இருந்ததாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.