Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க சொன்னால் சரக்கு பாட்டிலுக்கு தமிழில் பெயர் வைக்கிறார்கள்; முன்னாள் அமைச்சர்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கச் சொல்லும் காலம் போய் தற்பொழுது மதுபானத்திற்கு வீரன் என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

former minister mr vijayabaskar criticize dmk government in karur district vel
Author
First Published Apr 4, 2024, 10:50 PM IST

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் அதிமுக சார்பில், பெரியார் நகர், அக்கரகாரம், ஜீவா நகர், காமராஜர் நகர், கோவிந்தம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக பொதுமக்கள் வேட்பாளருக்கும், முன்னாள் அமைச்சருக்கும் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது புரோட்டா சுட்டு ஒரே இலையில் சாப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன்

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பேசுகையில், தமிழில் பெயர் வைக்கச் சொல்லும் காலம் போய், தற்பொழுது மதுபானத்திற்கு வீரன் என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர். வீரன் என்ற சரக்கு எப்படி இருக்கிறது என்று குடிமகனிடம் கேட்டபோது பொழுது வீரமாக இருக்கிறது என்றும், சரக்கில் ஒரு விஷயம் இல்லை என்று சிரித்துக் கொண்டே பேசினார். 

மோடி மீண்டும் வெற்றி பெற்றால் நாட்டில் நடைபெறும் கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும் - கனிமொழி எச்சரிக்கை

முன்னாள் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் பெண்களுக்கு என்று  மதுபான கூடம் அமைத்த ஒரே அரசு இந்த திராவிட மாடல் அரசாங்கம் தான். அதிமுக ஆட்சியில் ரூபாய் 350 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அன்று மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் சரியாக இருந்தது. ஆனால் தற்பொழுது  திமுக ஆட்சி வந்த பிறகு போதிய அடிப்படை வசதி இல்லாத சூழ்நிலை உள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios