Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவை பிடித்துள்ள நோய் இபிஎஸ்..! கூவத்தூரில் நடந்தது என்ன.? விசாரணை கமிஷன் தேவை- மனோஜ் பாண்டியன்

 ஓ.பி.எஸ். ஆட்சிக்கு வந்த பிறகு, கூவத்தூரில் என்ன நடந்தது என விசாரிக்க தனி கமிஷன் அமைக்க வேண்டும், விசாரித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஒன்றிணைய ஒத்துழைக்காத இ.பி.எஸ்-ஐ கழித்துவிட்டு அனைவரும் ஒன்றிணைவோம் என மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 

In the meeting of district secretaries administrators said that a mega alliance will be formed under the leadership of OPS
Author
First Published Dec 21, 2022, 1:13 PM IST

ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் கூட்டம்

சென்னை வேப்பேரியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பன்ரூட்டி ராமசந்திரன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய பன்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய மாபெரும் இயக்கசத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கூடிய இடம். உங்களுக்கு எம்ஜிஆர் ஆசி உண்டு என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து புரட்சித்தலைவி ஆசியும் உங்களுக்கு உண்டு என தெரிவித்தார்.  அதிமுகவில் உள்ள எடப்பாடி போன்ற இடைச் செருகல்களை அப்புறப்படுத்தி இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அண்ணாமலை வாட்ச் தேவையில்லாத ஆணி..! அவர் எதை கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..? கே.எஸ்.அழகிரி

In the meeting of district secretaries administrators said that a mega alliance will be formed under the leadership of OPS

எடப்பாடியிடம் டெண்டர் படை

இதனை தொடர்ந்து பேசிய மருது அழகுராஜ், நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் கிடைத்த நாற்காலியை உரியவரிடம் ஓப்படைத்தவர் ஓபிஎஸ் இரண்டு முறை தன் பதவியை ஓபிஎஸ் சிடம் வழங்கி ஜெயலலிதா அடையாளம் காட்டி விட்டார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மனோஜ் பாண்டியன், அரை குறை சட்ட வல்லுனர்களை வைத்துக் கொண்டு ஓறைறை தலைமை என கூறி வருகின்றனர். அதிமுகவை பிடித்துள்ள நோய் எடப்பாடி, அதற்கான மருந்து ஓபிஎஸ்முன் வைத்த காலை பின் வைக்காமல் போராடியவர் ஓபிஎஸ்,  டெண்டர் படை தான் எடப்பாடியிடம் உள்ளது. நம்மிடம் உள்ளது தொண்டர் படை என தெரிவித்தார். 10 ஆண்டு காலம் சம்பாதிப்பவர்கள் உங்களிடம் உள்ளனர். எங்களிடம் இருப்பவர்கள் சுயநலமில்லாத பாடுபடும் தொண்டர்கள் என கூறினார். ஓபிஎஸ் ஆட்சிக்கு வந்ததும் கூவத்தூரில் என்ன நடந்த்து என தனி கமிஷன் அமைத்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அவரு மேல ரொம்ப மரியாதை இருக்கு! எதுக்கு இப்படி செய்றாரு தெரியல!பண்ருட்டியாரை நினைத்து வருத்தப்பட்ட ஜெயக்குமார்

In the meeting of district secretaries administrators said that a mega alliance will be formed under the leadership of OPS

மெகா கூட்டணிக்கு ஓபிஎஸ் தலைமை

இதனை தொடர்ந்து பேசிய ஜேசிடி பிரபாகர், 4 பணக்கார்கள் கையில் அதிமுக சிக்கி விடக்கூடாது என்ற கவலையில் தான் ஓபிஎஸ் போராடுகிறார். ரவீந்திரநாத்க்கு அமைச்சர் பதவி கொடுக்க அமித் ஷா முன் வந்த போது கூட ஓபிஎஸ் மகன் என்பதற்காக தடுத்ததை கூட  ஓ.பன்னீர் செல்வம் அவர் பொறுத்து கொண்டார். 4பணக்காரர்கள் கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள், அதற்காகவா தொண்டர்கள் சிறை சென்றார், குடும்பத்தை இழந்தோம் என தெரிவித்தவர், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் அதற்கு ஓபிஎஸ் தலைமை வகிப்பார்.காலம் கனிந்து வருகிறது என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலை எதை வேண்டும் என்றாலும் வெளியிடட்டும்..! எதிர்கொள்ள தயார்..! இறங்கி அடிக்கும் சேகர் பாபு

Follow Us:
Download App:
  • android
  • ios