அண்ணாமலை எதை வேண்டும் என்றாலும் வெளியிடட்டும்..! எதிர்கொள்ள தயார்..! இறங்கி அடிக்கும் சேகர் பாபு
வட பழனி கோயிலில் டிக்கெட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்ததையடுத்து அறநிலையத்துறை அலுவலர்கள் ரேவதி,ரவி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கைலாசநாதர் கோயில் பராமரிப்பு
சென்னை பாடியில் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைலாசநாதர் திருக்கோயில் 1996 ஆம் ஆண்டு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது . 24 ஆண்டுகள் கடந்து திருக்கோயிலின் திருப்பணிகள் இந்து சமய அறநிலையத்துறையின் இரண்டு கமிட்டிகளிலும் திருப்பணி தொடங்குவதற்கு உண்டான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 400 ஆண்டுகள் பழமையான கோயில் என்பதினால் சேதம் அடைந்து இருக்கும் சுவர்கள் அனைத்தும் அகற்றப்படும் அதை தொடர்ந்து புதிய சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கும் என குறிப்பிட்டார் .
நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியை தட்டி தூக்கிய இபிஎஸ்..! அதிர்ச்சியில் சீமான்
120 கோயில்களுக்கு புனரமைப்பு
சுண்ணாம்பு சுவர்கள் அணைத்தும் அகற்றப்பட்டு கருங்கல் முலாம் சுவர் அமைக்க படும். மேலும் அலங்கார கோபுரம் நிறுவபடும் என சேகர்பாபு தெரிவித்தார். தமிழர்களுடைய நாகரீகம் பண்பாட்டு மற்றும் தன்மையும் பரிசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள திருக்கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில்களுக்கு நிதி வசதி இல்லை என்றால் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இந்த திருக்கோயில்களுக்கு திருப்பணி ஆற்றுமாறு உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 120 கோவில்களுக்கு புனரமைப்பு செய்ய பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்யப்படும் என குறிப்பிட்டார்.
மீண்டும் மரண பயத்தை காட்டும் கொரோனா.. தமிழகத்தில் நிலை என்ன?அமைச்சர் மா.சு பரபரப்பு தகவல்..!
மடியில் கனமில்லை- வழியில் பயமில்லை
வடபழனி முருகன் கோவிலில் நீதிபதி ஒருவர் சாமி தரிசனம் செய்ய சென்ற போது பணியில் இருந்த அறநிலையத்துறை அலுவலர்கள் டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் புகார் தொடர்பாக அறநிலையத்துறை அலுவலர்கள் ரேவதி,ரவி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சொல்லிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை . எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என கூறிய சேகர் பாபு, ஆதாரத்தை வெளியிடட்டும் என கூறினார் மேலும் சட்டப்படி திமுக எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை வாட்ச் தேவையில்லாத ஆணி..! அவர் எதை கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..? கே.எஸ்.அழகிரி