அவரு மேல ரொம்ப மரியாதை இருக்கு! எதுக்கு இப்படி செய்றாரு தெரியல!பண்ருட்டியாரை நினைத்து வருத்தப்பட்ட ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம்  தலைமையிலான நடத்தும் கூட்டத்தை  தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும். ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது. 

Why did Panruti Ramachandran senior politician, become like this? jayakumar

ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- ஊர் வாயை மூடினாலும் இந்த ஜெயக்குமார் வாயை மூட முடியாது. திமுக செய்யும் மக்கள் விரோத போக்கு குறித்து தொடர்ந்து பேசுவேன். திமுக சகாப்தம் இதோடு முடிந்தது. இனி அவர்கள் ஆட்சிக்கு வர போவதில்லை. ஓ.பன்னீர்செல்வம்  தலைமையிலான நடத்தும் கூட்டத்தை  தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும். ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது. 

Why did Panruti Ramachandran senior politician, become like this? jayakumar

மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமசந்திரன் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று தெரியவில்லை. பண்ருட்டி ராமசந்திரன் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அதை அவர் கெடுத்துக் கொள்ள வேண்டாம். கூடா நட்பு கேடாய் முடியும் என பண்ருட்டியாருக்கு ஜெயக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார். 

Why did Panruti Ramachandran senior politician, become like this? jayakumar

அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்து நீடித்து வருகிறது. திமுகவினர் சந்தர்ப்பவாதிகள். அவர்களுக்கு பதவி ஒன்று தான் முக்கியம். ஆகையால், அவர்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி வருவார்கள். திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்வது பாஜக தான் என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios