Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வின் பாதிப்பு குறைவு... திட்டக் குழு து.த ஜெயரஞ்சன் கொடுத்தாரு பாருங்க விளக்கம்.

பொது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை அரசு மானிய விலையில் வழங்குவதால் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு பாதிப்பு குறைவாகவே  இருப்பதாக திட்டக்குழு தலைவர் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.

In Tamil Nadu, the impact of price rise is less... Explanation given by the Jayaranjan.
Author
First Published Sep 21, 2022, 7:10 PM IST

பொது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை அரசு மானிய விலையில் வழங்குவதால் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு பாதிப்பு குறைவாகவே  இருப்பதாக திட்டக்குழு தலைவர் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார். வட மாநிலங்களில் விலைவாசி உயர்வு 27 சதவீதம் வரை உள்ளது என்றும் தமிழ்நாட்டில் 4 சதவீதம் அளவில் குறைவாகவே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

In Tamil Nadu, the impact of price rise is less... Explanation given by the Jayaranjan.

இதையும் படியுங்கள்:  பாஜக கவுன்சிலர் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு... அண்ணாமலை கடும் கண்டனம்!!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசு  அறிவிப்புகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதேபோல் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்ற ப்படவில்லை என்ற விமர்சனமும் இருந்துவருகிறது. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு அதிகரித்துள்ளது. இது தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்:   நீங்கள் எஸ். சி தானே? ஆ.ராசாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி - வைரல் வீடியோ!

அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- வட மாநிலங்களில் 27 சதவீதம் வரை விலை வாசி உயர்வு அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 4 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது, தற்போது விலைவாசி உயர்வு அதிகரித்திருந்தாலும், பொது விநியோகத்தை  தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இச்சட்டத்தால் ஆண்டுக்கு சுமார்  7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவு அரசு செலவு செய்கிறது, மேலும் அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது, இதனால் விலை உயர்வு பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப் படுகிறார்கள்.

In Tamil Nadu, the impact of price rise is less... Explanation given by the Jayaranjan. 

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை ஆய்வு செய்ததில், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் 60 சதவீதம் பேர் பயனடைந்து வருகின்றனர். இதே நேரத்தில் ஒன்றிய அரசு குறைவான விலையில் பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கினால் இன்னும் கூடுதலாக மக்கள் பயனடைவார்கள் என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் அடிப்படையில்  துணைத் தலைவர்  ஜெயரஞ்சன் இவ்வாறு கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios