Asianet News TamilAsianet News Tamil

பாஜக கவுன்சிலர் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு... அண்ணாமலை கடும் கண்டனம்!!

பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்ட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவத்திற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

annamalai strongly condemns for case registered against 75 people including bjp councillor
Author
First Published Sep 21, 2022, 6:46 PM IST

பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்ட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவத்திற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியன்று சென்னை – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர், கோவிலை, பக்தர்களின் கட்டுப்பாட்டுக்கு விடுமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மயிலாப்பூர் போலீசார், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: “டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு

இந்த நிலையில், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறைவழிபாட்டிற்கு சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்குத் தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளைப் பறித்துள்ளார்கள்.

இதையும் படிங்க: ஆ.ராசாவுக்கு எதிராக ஒருபோதும் போராட்டம் நடத்த மாட்டோம்.. பிளான் வேற.. உறுதியாக சொன்ன அண்ணாமலை.

கோபாலபுரம் குடும்பத்தார் கோவிலுக்கு செல்லும்போது, பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? ஒருமித்த சிந்தனையோடு சிலர் கூடி கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் எங்கேனும் உள்ளதா? மக்களின் அன்றாட பிரச்சனைக்குத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் இந்த திமுக அரசின் நடவடிக்கையை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios