எனக்கு கால் வலி .. முடிந்தால் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வேன்.. எடப்பாடி பழனிசாமி!

 டிசம்பர 3, 4ம் தேதி பெய்த மழை, வெள்ளத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம். 

if possible I will attend the opening ceremony of Ayodhya Ram temple.. Edappadi palanisamy tvk

மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு சீட் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி;- மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அமைந்த பிறகு தொகுதிகள் பங்கீடு குறித்து பேசுவோம். மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு சீட் வழங்கப்படும். மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். 

இதையும் படிங்க;- TASMAC Shops: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்கள் கலந்து கொள்ளலாம். எனக்கு கால் வலி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் நான் கலந்து கொள்வேன். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசு நிறைவேற்ற வேண்டும்.

சென்னையில் கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. முதலமைச்சர், அமைச்சர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத வகையில் மழை நீர் வடிகால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள். இதனை மக்களும் நம்பினார்கள். இந்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

இதையும் படிங்க;- OPS vs EPS : குழப்பம் ஏற்படுத்தி குளிர் காய நினைத்த ஓபிஎஸ்க்கு இறைவன் கொடுத்த தண்டனை- விளாசும் ஜெயக்குமார்

இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மாவட்டங்களில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என அறிவித்தது. இது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. அப்படி இருந்தும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அதிக கனமழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios