OPS vs EPS : குழப்பம் ஏற்படுத்தி குளிர் காய நினைத்த ஓபிஎஸ்க்கு இறைவன் கொடுத்த தண்டனை- விளாசும் ஜெயக்குமார்

அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் அதிமுக பங்கேற்பது என்பது கொள்கை முடிவு அது குறித்து அதிமுக கட்சி  தலைமை  தான் முடிவெடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Jayakumar said that the AIADMK leadership will take a decision regarding participation in the Ram temple event KAK

மொழியை வியாபாரம் செய்யும் திமுக

அதிமுக மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் இந்த கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் உரிமை உள்ள ஒரே கட்சி அதிமுக கட்சி தான். மொழியை வைத்து வியாபாரம் செய்கின்ற கும்பல் திராவிட முன்னேற்றக் கழக கும்பல்.மொழியை வளர்ப்பது அதிமுக தான். கோப்புகளில் தமிழில் கையொப்பமிட வேண்டும் என சொன்னவர் எம்ஜிஆர். தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படக்கூடிய இயக்கம் அதிமுக தான்.

Jayakumar said that the AIADMK leadership will take a decision regarding participation in the Ram temple event KAK

இறைவனே தண்டனை வழங்கியுள்ளார்.

ஓபிஎஸ் அதிமுக கட்சியின் சின்னம் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை தொடரும் என நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பை அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக பார்க்கின்றனர். ஓபிஎஸ் கழகத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். உண்ட வீட்டுக்கு இரண்டாகம் செய்தவர் ஒபிஎஸ். அதிமுக தொண்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தகுந்த தண்டனை இறைவனே வழங்கியுள்ளார். ஓபிஎஸ்- இபிஎஸ் ஒன்றிணைவது என்பது  எப்பொழுதும் நடக்காது என தெரிவித்தார். 

Jayakumar said that the AIADMK leadership will take a decision regarding participation in the Ram temple event KAK

ராமர் கோயில் குடமுழக்கில் அதிமுக பங்கேற்பா.?

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசுதான் இந்த திமுக அரசு. சினிமா பாடலை போட்டு நடனமாடி  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கொச்சைப்படுத்தி விட்டனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறப் போவதில்லை. ராமர் கோயில் குடமுழுக்கு  பாஜகவிடமிருந்து அதிமுகவிற்கு அழைப்பு வந்துள்ளது. செல்லலாமா? வேண்டாமா ? என்பது கட்சி முடிவு எடுக்கும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

Breaking News : TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு- ரிசல்டை எப்படி தெரிந்து கொள்வது .?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios