மொழியை திணித்தால் திணிக்கும் கையிலேயே துப்பிவிடுவோம்... கமல்ஹாசன் ஆவேசம்!!
Kamal Kaasan: இந்தி திணிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பாணியில் இந்தி திணிப்பு குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பாணியில் இந்தி திணிப்பு குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி நாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தி மொழியை அனைத்து நிலைகளிலும் கட்டாயமாக்குவதுதான் பாஜக அரசின் நோக்கம் என்றார். மேலும் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க: இந்தி பேசாத மக்கள் மீது போர்... அமித்ஷாவின் திட்டத்தை சொல்லி அலறும் வைகோ.
இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சரின் இந்தி திணிப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்தி திணிப்பு குறித்து அவருக்கே உரிதான பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீமான் தான் உண்மையான மன நோயாளி..! எப்போதாவது மனநலம் பாதித்து நான் பேசி இருக்கிறேனா.? எச்.ராஜா ஆவேசம்
இந்தி திணிப்பு பற்றி பேசிய அவர், விட்டால் தமிழன் எம்மொழியையும் கற்கத் தயாராக இருப்பான். திணித்தால் திணித்த கையிலேயே துப்பிவிடுவான். அரபு மொழி தெரிந்த பாரதியார் தான் யாம் அறிந்த மொழிகளிலே ( யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்) என்று சொல்கிறார். நானும் அதை சொல்லலாம். நான் நடித்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் என்று தெரிவித்தார்.