நான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்ல நேரிடும் - பகீர் கிளப்பும் ஓ.பன்னீர்செல்வம்

தான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறக்குத்தான் செல்ல வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

if i speak some truths then edappadi palaniswami will go to tihar jail says former cm o panneerselvam vel

கோயம்புத்தூரில் ஓ பன்னீர்செல்வம் ஆதாரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மற்ற மாநிலங்கள் பார்த்து பார்த்து வியக்கும் ஆட்சியை ஜெயலலிதா கொடுத்தார். புரட்சி தலைவி மறைவிற்கு பின்னர் அவர்கள் கட்டி காப்பாற்றிய சட்டவிதிகள், அதிமுக தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்ற விதிகளை தூக்கி போட்டு விட்டனர். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால், மன்றாடி கேட்டு கொண்டதால் கழகத்தை அப்போது மீண்டும்  இணைத்தோம். நிரந்தர பொதுச்செயலாளர் என்ற உச்சபட்ச நிலையை ஏற்படுத்தினோம். 

கழகத்தின் பொருளாளராக  12 ஆண்டுகள் இருந்தவன் நான். எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றி விட்டனர். அந்தம்மா (சசிகலா) உங்களுக்கு முதலமைச்சர் பதவியை  கொடுத்தார்கள். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசுனீர்கள். 11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப் பட்டது. தவறான வழியில் சென்ற போது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத்திமிரில் இருந்தார் எடப்பாடி. அதனால் ஆட்சி போனது, அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்று போனது. 

தமிழக்ததில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; முதல்முறையாக தென் மாவட்டங்களுக்கு சோகத்துடன் வந்துள்ளேன் - தமிழிசை கருத்து

ஈரோடு இடைதேர்தலில் தனியாக நின்றால் ஓட்டுக்கள் பிரியும். வாபஸ் வாங்கிடுங்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். அதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில்  வாபஸ் வாங்கினேன். ஆனால் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஈரோட்டில் தோற்று போனது. இந்த தேர்தல்களில் தோற்று போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம் தொண்டர்களுக்காக வாதாடி கொண்டு இருக்கின்றோம். இந்த பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். அங்கு குண்டர்கள் தான் இருக்கின்றனர். தொண்டர்களுக்கு கொடுத்துள்ள உரிமையை தந்தால்தான் தலைவர்களுக்கு நன்றி செலுத்துவது போன்றது. 

எம்.பி. கனிமொழியுடன் இணைந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தனிகட்சி துவங்கும் நோக்கமில்லை, கோரப்பிடியில் இருந்து அதிமுகவை கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெ ஆன்மாவிடம் ஒப்படைத்தால் தான் நன்றியாக இருக்கும். அதிமுக துவங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவேன். தனிக்கட்சியை எப்போதும் துவங்க மாட்டேன். தனிக்கட்சி ஆரமித்தால் உச்ச நீதிமன்ற வழக்கில் இடையூறு ஏற்படும். முதல்வல் பதவியை மூன்று முறை கொடுத்தார்கள். நான் திருப்பி கொடுத்து விட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகின்றேன். ஆட்சியில் இருந்த போது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவுத்து விட்டால், எடப்பாடி பழனிச்சாமி  திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும். அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதை 100 சதவீதம் செய்தால்தான் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்றார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios