ED-ஐ பணி செய்யவிட்டால், மொரிஷியசில் இருக்கும் செந்தில் பாலாஜியின் பணத்தை கொண்டு வந்துடலாம் - அண்ணாமலை

அமலாக்கத்துறையை பணி செய்யவிட்டால், செந்தில் பாலாஜி மொரிஷியசில் பதுக்கி இருக்கும் பணத்தை கொண்டு வந்து விடலாம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

If ED is tasked, Senthil Balaji can bring money stashed in Mauritius - Annamalai

இன்று காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ இந்தியாவில் இது போன்ற முதலமைச்சர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் காமராஜர். காமராஜர் கண்ட கனவுகளை பிரதமர் மோடி நிறைவேறி வருகிறார். தமிழக அரசியலில் மீண்டும் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளோம். அதை நிறைவேற்றுவோம்.

திமுகவின் தீர்மானங்கள் பொய்யும், புரட்டுமாக உள்ளது. மத்திய அரசை குறை சொல்வதாக மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பரிபோய் கொண்டிருக்கிறது. அதை பற்றி எந்த தீர்மானத்தையும் திமுக நிறைவேற்றவில்லை.

பொது சிவில் சட்டம் குறித்து பொய் சொல்கின்றனர். ஜிஎஸ்டி வந்த பிறகு அனைத்து மாநிலங்களும் முன்னேறி வருகிறது. தமிழகம் மட்டும் முன்னேறாததற்கு ஜிஎஸ்டி காரணம் இல்லை. 20 முதல் 30% கமிஷன் கேட்டால் தொழில்துறை எப்படி உள்ளே வரும்.

முதலமைச்சரும், உதயநிதியும் அமைச்சரவையில் ஆங்கிலம், இந்திய பேசுபவர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் பிரதமர் என்ன பேசினார் என்பது முழுமையாக தெரியும். இவர்கள் பிரதமரோடு துணை நின்று, சிபிஐ, அமலாக்கத்துறையை பணி செய்யவிட்டால், செந்தில் பாலாஜி மொரிஷியசில் பதுக்கி இருக்கும் பணத்தை கொண்டு வந்து விடலாம். பிரதமர் கூறிய பணத்தில், செந்தில் பாலாஜியின் மொரிசியஸ் பணம் இருக்கும். இதில் முதலமைச்சர் முடிவெடுக்க வேண்டும்.

ராஜ கண்ணப்பன் மீது அமலாக்கத்துறை உள்ளது. இந்தியாவில் கருப்பு பணம் வெளியே பதுக்கி வைத்துள்ளவர்களில் தமிழக அரசியல்வாதிகள் தான் அதிகம் பேர் உள்ளனர். எனவே வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வந்தால் திமுக அமைச்சர்களின் கருப்பு பணம் இருக்கும். இதில் நடவடிக்கை எடுத்தால், நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் படுத்து ககொள்கின்றனர். கருப்பு பணம் குறித்து பேசி முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. ஏனெனில் அவர்களும் அதில் சம்மந்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை.. "திமுக சொன்னதை செய்யவேண்டும்" - கடும் கண்டனம் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios