என் மீது வழக்குப்பதிவு செய்ததால் பயந்துடுவோமா? அண்ணாமலை ஆவேசம்!!
அனுமதியின்றி பேரணி நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி பேரணி நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்டார். இதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டார். மேலும் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணியும் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவ படையினர், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பேசிய அண்ணாமலை, ஒரு புறம் தமிழகத்தை சட்ட ஒழுங்கு செயலிழந்த மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது இந்த திமுக அரசு, மறுபுறம் தமிழக முதல்வர் பொதுமக்களை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்த்து திமுகவுக்கு பயமா.? முதல்வரை எது பயமுறுத்துகிறது.? பாஜக குஷ்பு அதிரடி
ராணுவ வீரர் மரணம் குறித்து, திமுக தொடர் மௌனம் கடைப்பிடிப்பது துரதிர்ஷ்டவசமானது. எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும் பொதுமக்களும் திமுக அடாவடித்தனத்திற்கு ஆளாகிய போதும், தமிழக காவல்துறை வெறும் பார்வையாளராக வாய்மூடி இருந்து வருகிறது. பாஜக, ராணுவ வீரர் பிரபுவின் மனைவிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள காசோலையை வழங்குவதோடு, அவரது இரண்டு குழந்தைகளின் கல்விக்கான செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்றார்.
இதையும் படிங்க: சிவசேனா விவகாரம் - தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இதனிடையே அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, வழக்குப்பதிவு செய்து விட்டதால் யாரும் பயந்து விட மாட்டோம். இது என் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் 84 ஆவது வழக்கு. இதற்கும் பயப்பட மாட்டேன். ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்திடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லை என்றால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிர படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.