Shiv Sena Case: சிவசேனா விவகாரம் - தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சிவசேனா சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Supreme Court rejects to overrule Election Commission order on Shiv Sena party name symbol

சிவசேனா கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் ஒதுக்கீடு செய்தது. இதனை எடுத்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மிகவும் ஒழுங்கீனமான நகரம் டெல்லிதான்: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

இன்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இரண்டு வாரங்களில் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Supreme Court rejects to overrule Election Commission order on Shiv Sena party name symbol

சிவசேனா கட்சியில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக உள்ள 40 எம்எல்ஏக்களைக் கொண்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தலைமையில் தனி அணியை உருவாக்கினார். இதனால், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக துணையுடன், ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வரானார்.

West Bengal: சமூக விரோதிகளின் சொத்துகளைக் அரசு கைப்பற்ற சட்ட மசோதா நிறைவேற்றம்

பின்னர் சிவசேனா கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தங்களுக்கு வழங்க ஏக்நாத் ஷிண்டே தேர்தல் ஆணையத்தில் முறையி்ட்டார். இதற்கு எதிராக உத்தவ் தாக்கரேயும் தேர்தல் ஆணையத்தை அணுகினார். இதனால் இரு அணியினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறிவந்தனர்.

இந்த விவகாரத்தை விசாரித்த தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரேயைவிட ஏக்நாத் ஷிண்டேவுக்கு அதிகமான எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆதரவு உள்ளதைக் காரணமாகக் காட்டி, சிவசேனா கட்சியும்,  வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கே உரியது என அறிவித்தது.

Stray Dogs: தெருநாய்க்கு உணவு கொடுப்பதை தடுத்தவரை கொடூரமாகக் கடித்து வைத்த நாய் பிரியர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios