West Bengal: சமூக விரோதிகளின் சொத்துகளைக் அரசு கைப்பற்ற சட்ட மசோதா நிறைவேற்றம்
போராட்டங்களின்போது சமூக விரோதிகளால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வகைசெய்யும் சட்டதிருத்த மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேறியது.
பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டத் திருத்த மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவினரின் எதிர்ப்புக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மேற்கு வங்க பொது ஒழுங்கு பராமரிப்பு திருத்தச் சட்டம் 2023 இன் கீழ், போராட்டங்களின்போது பாதிக்கப்படுவோருக்கு குற்றம் புரிந்தவர்களின் சொத்துகளில் இருந்தே இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர் தனிநபராகவோ அரசாங்கமாகவோ கூட இருக்கலாம்.
சேதம் ஏற்பட்ட 60 நாட்களுக்குள் இழப்பீடு கோரி நீதிமன்றத்திற்கு செல்ல இந்த மசோதாவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில், குற்றம் புரிந்தவர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்தி ஏலம் விடும். அதன் மூலம் உரியவருக்கு இழப்பீடு வழங்கப்படும். பொதுச்சொத்துகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஏலத்தொகைக் கொண்டு அவை மறுசீரமைப்பு செய்யப்படும்.
நீதிமன்றங்கள் சம்பவம் நடந்த 180 நாட்களுக்குள் சொத்துகளை முடக்குவதற்கான இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இந்த மசோதா அனுமதிக்கிறது. இதுபற்றி மாநில நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, இச்சட்டம் பிறரின் உடைமைகளை நாசம் செய்பவர்களிடம் இருந்து இழப்பீடு பெற உதவும் என்கிறார். ஆனாரலும், “ஒருவரின் விருப்பப்படி செய்யப்படாது," என்று அவர் மேலும் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் சம்பவம் நடந்த 60 நாட்களுக்குள் உரிய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவேண்டும். இரு தரப்பினரையும் உள்ளடக்கிய விசாரணைக்குப் பின்பே சொத்துகள் முடக்கப்படும்” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இந்த மசோதா மூலம் பொது ஒழுங்கு பராமரிப்புச் சட்டம் மிகக் கடுமையாக்கப்படும் மாற்ற என்றும் அமைச்சர் சந்திரிமா கூறுகிறார். "ஒருசில சமூக விரோத சக்திகள் தங்கள் நோக்கங்களை அடைய முயல்வதால், மேற்கு வங்க பொது ஒழுங்கு பராமரிப்புச் சட்டம் 1972 இல் திருத்தம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பொது சொத்துக்கும் தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படும்போது, உரிய நிவாரணம் வழங்குவதையே நோக்கமாகக் கொண்டது” எனவும் அமைச்சர் சந்திரிமா வலியுறுத்துகிறார்.
மேற்குவங்க சட்டப்பேரவையில் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா அரசியல் இயக்கங்களை ஒடுக்க மேற்கொள்ளும் முயற்சி என்று குற்றம் சாட்டிப்படுகிறது.
"இது ஒரு பிற்போக்கு நடவடிக்கை என்று நாங்கள் உணர்கிறோம், மேலும் இது ஜனநாயக அரசியல் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கே உதவும்” என பாஜக தலைமைக் கொறடா மனோஜ் திக்கா விமர்சிக்கிறார்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப் பிரதேசத்திலும் இதேபோன்ற மசோதா கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Nitish Kumar Angry:இதென்ன இங்கிலாந்தா! இங்கிலீஸ்ல பேசுறீங்க! விவசாயியை கடிந்து கொண்ட நிதிஷ் குமார்