Asianet News TamilAsianet News Tamil

என் மீது கொலை உள்ளிட்ட 19 வழக்கு இருக்கு.. ஆனாலும் அமைச்சராக இருக்கேன்.. மீண்டும் சர்ச்சையில் கே.என்.நேரு..

அரசியலில் யாரும் புனிதர் அல்ல என்றும் என்மீது கொலை உள்ளிட்ட 19 வழக்கு போட்டுள்ளனர் ஆனாலும் அமைச்சராக இன்றைக்கு இருக்கிறேன் என்றும் புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 

I have a murder case against me - Minister KN Nehru speech
Author
Tamil Nadu, First Published May 16, 2022, 4:27 PM IST

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நான்  திமுக ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் சுமார் 100 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக எதிர்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால் நான் அப்படி சம்பாதிக்கவில்லை என்றும் அவ்வாறு சம்பாதித்தாலும் அது மக்கள் நலப்பணிக்கு தான் செலவழிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார். 

மேலும் படிக்க: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போச்சு.. யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. வேலுமணி.!

முதலில் உங்கள்(அதிமுக) கட்சி பிரச்சனையை சரி செய்யுங்கள். பிறகு எங்களிடம் வந்து பேசுங்கள். அப்படி நான் ஊழல் சம்பாதித்தேன் என்பதற்கு ஆதாரம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள். எங்களை உள்ளே தள்ளுங்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.  கடந்த ஆட்சி காலத்தில் என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்கு போட்டுள்ளதாக கூறிய அமைச்சர்  அதை எல்லாம் கடந்து தான் இன்றைக்கு அமைச்சராகி உள்ளேன் என்று பேசினார். 

திருவெறும்பூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் நேரு ஒன்றும் புனிதர் அல்ல என்று எதிர்க்கட்சியினர் பேசி உள்ளனர். அவர்கள் இப்பொழுது பதில் சொல்கிறேன். நான் புனிதராக இருந்தால், என் வாயில் வெண்ணெய் தடவி படுக்கப் போட்டு இருப்பீர்கள். புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம். அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்? என்று கேள்வியெழுப்பினார்.

திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும். சென்னைக்கு அடுத்த நிலைக்கு திருச்சி மாவட்டத்தை உயர்த்தும் வகையில் பணியாற்றுவோம். எங்கள் ஆட்சியில் நாங்கள் அனைவரும் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம். ஊழல், கமிஷன் உள்ளிட்ட முறைகேட்டிலும் ஈடுப்படமாட்டோம் என்றும் அவர் பேசினார்.

மேலும் படிக்க: தமிழணங்கு ஒவியத்தில் வட மொழி எழுத்து..புத்தியை காட்டிடீங்களே .. அண்ணாமலையை வச்சி செய்யும் தங்கம் தென்னரசு

Follow Us:
Download App:
  • android
  • ios