Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போச்சு.. யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. வேலுமணி.!

 திருவள்ளூர் மாவட்டம், கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவரும், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட இணைச் செயலாளருமான மனோகரன் அவர்கள் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Law and order has been disrupted since the DMK came to power... SP Velumani
Author
Tamil Nadu, First Published May 16, 2022, 4:02 PM IST

படுகொலை செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர்  மனோகரன் அவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வகையில், குற்றவாளிகள் யாரும் தப்பித்துவிடாமல் உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என வேலுமணி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருவள்ளூர் மாவட்டம், கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவரும், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட இணைச் செயலாளருமான மனோகரன் அவர்கள் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.  மனோகரன் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

Law and order has been disrupted since the DMK came to power... SP Velumani

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு முற்றுலுமாக சீர் கெட்டு விட்டது என்பதை கழகத் தலைமையும், நானும் பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். ஆனாலும் இந்த மக்கள் விரோத திமுக அரசு, சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் கவனம் செலுத்தாதன் காரணமாக தமிழகத்தில், மக்கள் பிரநிதிகள் உட்பட யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது.

Law and order has been disrupted since the DMK came to power... SP Velumani

இந்த நிலையை மாற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர்  மனோகரன் அவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வகையில், குற்றவாளிகள் யாரும் தப்பித்துவிடாமல் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என வேலுமணி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios