புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாட்களில் சரியாகி விடுகிறார்கள். வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றமோ, பயமோ அடைய வேண்டாம். 

Holidays for schools in Tamil Nadu too? minister ma subramanian

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான நிலை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாட்களில் சரியாகி விடுகிறார்கள். வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றமோ, பயமோ அடைய வேண்டாம். வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என்றார். 

இதையும் படிங்க;- வேலையை காட்ட ஆரம்பித்த புதிய வைரஸ்.. வேறு வழியில்லாமல் அதிரடி முடிவு எடுக்கப்போகும் பள்ளிக்கல்வித்துறை?

Holidays for schools in Tamil Nadu too? minister ma subramanian

 வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என அவரிடம் கேட்டதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு காய்ச்சலின் தீவிரம் தமிழகத்தில் இல்லை என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க;- மீண்டும் மிரட்ட தொடங்கிய வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை..!

Holidays for schools in Tamil Nadu too? minister ma subramanian

உலகம் முழுவதும் சிறு வயதிலேயே மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிகத்துள்ளது. தமிழ்நாட்டில் இதுதொடர்பாக ஆய்வு செய்ய இதய சிகிச்சை வல்லுநர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  இவர ஞாபகம் இருக்கா.. பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஸ்வேதா கழுத்தை அறுத்து கொன்ற காதலன் செய்த காரியம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios