வேலையை காட்ட ஆரம்பித்த புதிய வைரஸ்.. வேறு வழியில்லாமல் அதிரடி முடிவு எடுக்கப்போகும் பள்ளிக்கல்வித்துறை?
தமிழ்நாட்டில் இன்புளுயன்சா எனப்படும் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.
வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்புளுயன்சா எனப்படும் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முக கவசம் அணிவது கட்டாயம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.மேலும், காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க;- மீண்டும் மிரட்ட தொடங்கிய வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை..!
இந்நிலையில், தற்போது 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல், 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்த ஐடெக் விபச்சாரம்! கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு! சிக்கிய 19 வயது இளம்பெண் புரோக்கர்!
இந்நிலையில், வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 24ம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த தேர்வு ஏப்ரல் 17ம் தேதியே தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.