மீண்டும் மிரட்ட தொடங்கிய வைரஸ் காய்ச்சல்.. பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை..!

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா, ஒமிக்ரானை தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.

10 days holiday for Puducherry schools

புதிய வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை முதல் 26ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1-8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா, ஒமிக்ரானை தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் இதனை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் உத்தரவிட்டுள்ளார். 

10 days holiday for Puducherry schools

மேலும், மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், மருத்துவ பொருள்கள் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த புதிய வைரஸ் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்களை அதிகம் பாதிக்கப்படுவதாக என கூறப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

10 days holiday for Puducherry schools

இந்நிலையில், புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களில் ஆரம்ப பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16ம் தேததி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios