Asianet News TamilAsianet News Tamil

“ஆ.ராசாவை ஸ்டாலின் நீக்குவாரா.. மோடி & அமித்ஷா தமிழ்நாட்டில் போட்டி.! ‘சீக்ரெட்’ சொன்ன அர்ஜுன் சம்பத் !”

ஏற்கனவே அறிவித்த மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற தேர்தல் அறிவிப்பு என்ன ஆயிற்று, அறிவிக்கப்படாத மின் வெட்டால் தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

hindu makkal katchi arjun sampath speech about a raja issue
Author
First Published Sep 16, 2022, 10:24 PM IST

மதுரையில் இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க புத்தகத்தை  வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘ மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து புத்தகமாக தமிழக மக்கள் அறியும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு மற்றும் மின் இணைப்பு கட்டணம் உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம்.  ஏற்கனவே அறிவித்த மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற தேர்தல் அறிவிப்பு என்ன ஆயிற்று, அறிவிக்கப்படாத மின் வெட்டால் தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

hindu makkal katchi arjun sampath speech about a raja issue

மேலும் செய்திகளுக்கு..“அதிமுகவில் அந்த 4 பேர்.. கொடநாடு வழக்கில் பகீர் சம்பவங்கள்” - எடப்பாடிக்கு பயம் காட்டிய ஆர்.எஸ் பாரதி !

தற்போது குறிப்பாக இலவச திட்டங்கள் மூலம் பொதுமக்கள் வீடுகளில் உள்ள மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பலவும் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாகவும், நிர்வாகம் சீர்கேடுகள் நிறைந்தும்  உள்ளது. ஆவின் பால் பொருள்கள் விலை மற்றும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆ.ராசா இந்து மக்களுக்கு எதிராக அவுதூறு பேசவைத்து திசைதிருப்பும் வேலை செய்து வருகிறது திமுக.

ஆ.ராசாவின் சான்றிதழில் இந்து என்றுதான் உள்ளது. இந்து என்ற பெயரில் அரசின் சலுகைகளை பெற்ற அவர் இந்துக்களை இழிவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது அவரை திமுகவில் இருந்து நீக்கி மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளை பிரதமர் பிறந்த நாள் என்பதை சமூக நீதி நாளாக கொண்டாட உள்ளோம். அம்பேத்கர் கொள்கை வழியில் பழங்குடியினர் பட்டியலில் நரிகிறவர்களை சேர்த்து அரசின் உயரிய பதவிகளில் பழங்குடியினர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

மேலும் செய்திகளுக்கு..உடலுறவு கொள்வதில் பிரச்னை.. 8 ஆண்டுகள் கழித்து கணவன் ஒரு பெண் என அறிந்த மனைவி !

இதன்மூலம் தமிழகத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாகவும், பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் அரசாக உள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் வருகிற தேர்தலில் தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரத்தில் போட்டியிட கோரிக்கை விடுக்கிறேன்.

வன்முறையை ஏற்படுத்தும் வகையில், திராவிடர் கழகத்தினருக்கு போராட்டம் நடத்த  ஸ்ரீ ரங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் அதிபர் உலக அளவில் முதல் இடம் பெற்றது பெருமை கொள்ளப்பட வேண்டியது. அதானி உண்மையான தேசபக்தி கொண்டவர்கள். மோடிக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பது இடது சாரி கட்சிகளின் பொய் பிரச்சாரம்’ என்று பேசினார் அர்ஜுன் சம்பத்.

மேலும் செய்திகளுக்கு..காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.. ஆர்ப்பாட்டத்தில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்

Follow Us:
Download App:
  • android
  • ios