இதேபோல் முன்பு டர்பன் அணிவதற்கு எதிராக வழக்கு நடைபெற்றபோது மத நம்பிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க உரிமையுள்ளது என கூறினார்கள். ஆனால் இப்போது இஸ்லாமியர்கள் என்பதால் விசாரிக்காமல் வாய்மூடியிருக்கிறார்கள். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட ஹிஜாபுக்கு ஆதரவாக வலிமையான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஹிஜாப் அணிய வேண்டும் என்பது இஸ்லாம் மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று அல்ல என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நியு கல்லூரி மாணவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி சட்டங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள், தலித்துகளை குறிவைத்தே அச்சட்ட திட்டங்கள் இருப்பதாக கூறி நாடு முழுவதும் அவ்வப்போது போராட்டம் நடைபெறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்துத்துவ மாணவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு மாணவியை விரட்டிச் சென்று ஜெய் ஸ்ரீ ராம் என அம்மாணவர்கள் முழக்கம் எழுப்பினர். ஆனால் அந்த மாணவியும் அவர்களை எதிர்த்து நின்று அல்லாஹு அக்பர் என முழங்கியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதை படியுங்கள் : பொறுத்து பொறுத்த பார்த்து ஆளுநர் மாளிகைக்கு புயலாய் புறப்பட்ட ஸ்டாலின்.. அனுப்பி வைப்பதாக உறுதி அளித்த RN ரவி.

இதுதொடர்பாக ஆங்காங்கே சில மாநங்களில் போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில் ஹிஜாப் தடையை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 6 கல்லூரி மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இன்று காலை ஹிஜாப் அணிவது சீருடை சட்டத்திற்கு எதிரானது என்றும், இஸ்லாமிய மத வழக்கப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமில்லை என குறிப்பிட்டனர். எனவே கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என தீர்ப்பு அளித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி வீட்டிற்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த தீர்ப்பை ஆதரித்தும் எதிர்த்தும் பேசி வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசுக்கும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்திற்கு புதுக் கல்லூரி மாணவர்கள் சங்க தலைவர் முகமது தாஹிர் தலைமை தாங்கி வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. மத்திய அரசு தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதை படியுங்கள் : BB Ultimate : சிம்பு பற்றி பேசி வம்பில் சிக்கிய அனிதா.... அதுக்குனு இப்படியா சொல்லுவீங்க? - வைரலாகும் வீடியோ

இதேபோல் முன்பு டர்பன் அணிவதற்கு எதிராக வழக்கு நடைபெற்றபோது மத நம்பிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க உரிமையுள்ளது என கூறினார்கள். ஆனால் இப்போது இஸ்லாமியர்கள் என்பதால் விசாரிக்காமல் வாய்மூடியிருக்கிறார்கள். சட்டத்தை படிக்காமல் இஸ்லாமியர்களை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்றார். ஹிஜாப் அணிவது சீருடை சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், மதம் சார்ந்த நம்பிக்கைகளை கடைபிடிக்க இஸ்லாமியர்களுக்கு உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார். இந்த தீர்ப்பு ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், தங்கள் கல்லூரி சார்பில் மாணவர்களை ஒன்று திரட்டி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விட மிக வலிமையான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து கல்லூரி வலாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.