மத்திய அரசின், புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றிருக்கும் நல்ல அம்சங்களை அரசு புறக்கணிக்கவில்லை என்று விளக்கிய அமைச்சர், அதில் பல குறைபாடுகள் உள்ளதால், அதை மட்டும் வேண்டாம் என்கிறோம் என்று கூறினார். 

மத்திய அரசின், புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றிருக்கும் நல்ல அம்சங்களை அரசு புறக்கணிக்கவில்லை என்று விளக்கிய அமைச்சர், அதில் பல குறைபாடுகள் உள்ளதால், அதை மட்டும் வேண்டாம் என்கிறோம் என்று கூறினார்.சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னை பல்கலையின் கல்வி தரத்தை, மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்துவது குறித்து, கல்லுாரி முதல்வர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், செயலர் கார்த்திகேயன், பல்கலை துணைவேந்தர் கவுரி, உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி, பல்கலை பதிவாளர் மதிவாணன் மற்றும் கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில், இணைப்பு கல்லுாரிகளின் முதல்வர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது, கற்பித்தல் முறையில் தரத்தினை உயர்த்துதல் உள்ளிட்ட கருத்துகள் பெறப்பட்டன என்று அமைச்சர் கூறினார். 

மேலும் படிக்க: ஹாப்பி நியூஸ்.. இனி Ph.D. படிக்க P.G தேவையில்லை..புதிய நடைமுறையின் சிறப்பு அம்சங்கள்..முழு விவரம்..

இதனிடயே வரும் 2022- 2023 கல்வி ஆண்டுக்கான, பொறியியல் படிப்பிறகான கலந்தாய்வுக்கு ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக கூறிய அமைச்சர், மாநில கல்வி கொள்கை உருவாக்க, விரைவில் குழு அமைக்கப்படும் என்றார். மேலும் தமிழக அரசு கொண்டுவந்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம், ஏற்கனவே நடைமுறையில் இருந்த திண்ணை பள்ளிக்கூடம் வடிவிலானது தான் என்றார். 

மத்திய அரசின், புதிய கல்வி கொள்கையின் நல்ல அம்சங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்று விளக்கிய அமைச்சர், அதில் பல குறைபாடுகள் உள்ளதால், அதை மட்டும் வேண்டாம் என்கிறோம் என்று கூறினார். மேலும் மாணவர்கள் அனைவரும் கற்றலிலும், வேலைவாய்ப்பிலும் கவனம் செலுத்தும் வகையில், கல்லுாரிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,அண்ணாமலை பல்கலைகழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகளை சரிசெய்து, சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் படிக்க:மகிழ்ச்சி செய்தி..மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்வு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியீடு..

பல்கலைகழகங்களில் உள்ல தற்காலிக பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் விவகாரத்தில், பட்டதாரிகளின் கருத்தையும் கேட்டு, யாருக்கும் பாதிப்பில்லாமல் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்ற நடவடிக்கைகளில், எந்த பிரச்னையுமின்றி ஆசிரியர் தேர்வு வாரியம் கவனித்து கொள்ளும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்நிலையில் சென்னை பல்கலை.யில் நடந்த கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அப்போது, அமைச்சர் பொன்முடி தலையிட்டு, நிகழ்ச்சியை தமிழில் நடத்த அறிவுறுத்தியதோடு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின் நிகழ்ச்சியை துவங்குமாறும் உத்தரவிட்டார். அதன் பின்பு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:கொரோனா கண்டறியும் RTPCR பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!