ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் காய்ச்சல் வந்துவிடுகிறது..! திமுகவிற்கு எதிராக சீறிய தமிழிசை
அனைத்து ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறோம். இதில் விதிமீறல்கள் இல்லை. ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்யப்படுவதாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு மாநில்ங்களின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் கல்வி சுற்றுலா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அந்த மாணவர்களை புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது கல்விமுறை, போட்டி நிறைந்த உலகில் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு வெற்றியாளர்களாக உருவாகுவதற்கான முயற்சி ஆகியவை குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாணவர்களிடம் ஆலோசானை வழங்கினார்.
என் கணவர் மகளுடன் இருக்க விரும்புகிறார்… அவரை விரைந்து அனுப்ப நடவடிக்கை வேண்டும்… நளினி வேண்டுகோள்!!
6 பேர் விடுதலைக்கு தாமதம் ஏன்.?
இதனை தொடர்ந்து செய்தியாளர்கிடம் பேசியவர், தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்ததாக கூறினார். மேலும் தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் கருத்துகளை கூறியதாகவும் குறிப்பிட்டார். ராஜிவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆளுநர் எந்தவிதமுடிவும் எடுக்காமல் இருந்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுநரின் தாமதம் தான் 6 பேர் விடுதலைக்கு காரணம் என்றும் கூறமுடியாது. ஆளுநர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம். சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று ஆளுநர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம். ஆளுநருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்திருக்கக் கூடும் என தெரிவித்தார்.
சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களா..? போலீசாரின் அதிரடி சோதனையால் பரபரப்பு
குளிர் ஜூரம் வந்துவிடுகிறது
எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறோம். இதில் விதிமீறல்கள் இல்லை. ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்யப்படுவதாக கூறினார். ஆளுநர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் தெரிவித்தார். ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுவதாக தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் தமிழிசை கிண்டலாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்