என் கணவர் மகளுடன் இருக்க விரும்புகிறார்… அவரை விரைந்து அனுப்ப நடவடிக்கை வேண்டும்… நளினி வேண்டுகோள்!!
திருச்சி சிறப்பு முகாம் சிறை போல உள்ளதாக நளினி தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறப்பு முகாம் சிறை போல உள்ளதாக நளினி தெரிவித்துள்ளார். முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற நளினி தனது கணவர் முருகன் உட்பட நால்வரையும் சந்தித்து பேசி நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முகாமில் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் யாரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. விடுதலை செய்யப்பட்ட அனைவரும் அவரவர் விருப்பப்படும் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை !!
சாந்தன் இலங்கைக்கு போவதாக தெரிவித்துள்ளார். 16 வருடங்களாக மகளை பார்க்கவே இல்லை. அதனால் மகள் இருக்கும் லண்டனுக்கே என் கணவர் செல்ல விரும்புகிறார். என் கணவரை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். முகாமும் தற்போது ஜெயில் போல் மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் எங்கள் விடுதலையை எதிர்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இறந்த போது என் வீடு சோகத்தில் மூழ்கியது. சமைக்காமல் எல்லோரும் அழுதுக்கொண்டு இருந்தோம்.
இதையும் படிங்க: அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகளுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்... பாஜக மேலிட பொறுப்பாளர் அதிரடி!!
அப்படி இருக்கையில் அவர்கள் வீட்டில் நடந்த குற்றத்தில் நான் ஈடுபட்டேன் என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது சரிசெய்யப்பட்டால் மட்டுமே என மனம் நிம்மதி அடையும். என் கணவரை முகாமில் வைத்திருப்பது என் மனதை பாதித்துள்ளது. எங்களை முகாமிற்குள் அனுமதிக்கவில்லை. கடும் கட்டுப்பாடுகளுடன் தான் எங்களை முகாமில் அனுமதித்தனர். விடுதலை பிறகும் சிறையில் இருப்பது போல் உள்ளனர். ஆகவே அவர்களை அவரவர் விருப்பபடும் நாட்டிற்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும். நான் இலங்கை தூதரகத்திற்கு சென்று பேச உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.