மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்.. என்ன காரணம் தெரியுமா..?
நீங்கள் நினைத்து பார்ப்பதை விடவும் மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பார். அதில் எழுப்படும் பல்வேறு கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளித்து வருகிறார். இந்நிலையில் தன்னை டேக் செய்து போட்டிருந்த இளைஞரின் பதவிற்கு அமைச்சர் தற்போது பதிலளித்து உள்ளார்.
மேலும் படிக்க:மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !
அதில் அவர் மதுரையில் பல்வேறு தொழில் முதலீடுகளையும், ஐடி நிறுவனங்களையும் கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைக்காக சென்னை, கோவை மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு மதுரையில் போதிய அளவு ஐடி பார்க், சிப்காட் உள்ளிடவை இல்லாதது தான் பெரிய பிரிச்சனையாக உள்ளது என்று அதில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:ஓபிஎஸ் சுற்றுப்பயணம் ...? கோபமடைந்த செல்லூர் ராஜூ..! போங்கப்பா பேட்டியே வேணாம்...
இதற்கு டிவிட்டரில் பதிலளித்த அமைச்சர், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீங்க நினைத்து பார்ப்பதை விடவும் மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.