தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருப்பவர்களில் ஆறு பேரின் பதவி காலம் நிறைவடைவதை அடுத்து அந்த இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து திமுகவிருக்கும் அதிமுகவிற்கு தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதையடுத்து திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதிமுகவிடம் தேமுதிக ஒரு இடம் கேட்டு முரண்டு பிடித்து வந்த நிலையில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. இந்தநிலையில் இன்று காலையில் அதிமுக சார்பாக மாநிலங்களவைக்கு தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோரும் மற்றொரு இடத்தில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்பளித்ததற்கு முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஜி.கே.வாசன் நன்றி தெரிவித்தார்.

இவ்வளவு போராடியும் கிடைக்கலையே..! அதிமுக மீது கடும் கோபத்தில் பிரேமலதா..!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதில் கூட்டணி கட்சியான த.மா.கா வுக்கு ஒரு இடம் ஒதுக்கியிருப்பதற்காக அதிமுகவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி , துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவின் படி என்னை மாநிலங்களவை உறுப்பினராக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு அளித்தமைக்கு ஏற்ப, நான் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதுணையாக செயல்படுவேன். இந்த வாய்ப்பினை த.மா.கா முழுமையாகப் பயன்படுத்தும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!