Asianet News TamilAsianet News Tamil

பாஜக நோட்டாவை விட கூடுதலாக ஓட்டா.? குறைவான ஓட்டா.? தேர்தலில் பார்த்துவிடுவோம் -இறங்கி அடிக்கும் கீதா ஜீவன்

அதிமுக கட்சி தொண்டர்கள் நம்முடன் தான் இருக்கிறார்களா இல்லை பாஜகவிற்கு போய் விட்டார்களா என்று தேடும் நிலையில் அந்த கட்சி தலைவர்கள் உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார். 

Geetha Jeevan has said that the DMK will not be able to do anything due to the enforcement department investigation
Author
First Published Jul 19, 2023, 1:54 PM IST

திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்கலந்து கொண்டு பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் திமுகவிற்கு  கெட்ட பெயர் ஏற்படுத்த அமலாக்கத்துறையினர் மூலம் பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். திமுகவை பற்றி தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் இன்று பேசி வருகின்றனர் என விமர்சித்தார்.  திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என தெரிவித்தவர்,  மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கண்டு எதிர்கட்சியினர் வயிற்று எரிச்சலுடன் பேசி வருவதாக தெரிவித்தார். 

Geetha Jeevan has said that the DMK will not be able to do anything due to the enforcement department investigation

நோட்டாவா.? பாஜகவா.?

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பாஜக அரசு கொடுத்த எந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சமையல் எரிவாயு விலையை குறைக்க  நடவடிக்கை இல்லை,சுங்கச்சாவடி கட்டணம் குறைக்க வலியுறுத்தினால் உயர்த்தி வருகின்றனர்.  கல்வி கடன் பெற்றவர்களை விரட்டி விரட்டி பணத்தை வசூலிக்கின்றனர். சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு , பெட்ரோல், டீசல் விலை உயர்வு இதையெல்லாம் குறைத்தால் விலைவாசி குறையும். ஆனால் மத்திய அரசு எதையும் செய்யவில்லை, 

எனவே பாஜகவினர் நோட்டாவிட எவ்வளவு ஓட்டு கூட வாங்குகிறார்கள், எவ்வளவு ஓட்டு குறைவாக வாங்குகிறார்கள் என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பார்ப்போம் என தெரிவித்தார். , அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் இன்னும் அந்த கட்சி செட் ஆகவில்லை. கட்சியினர் நம்முடன் தான் இருக்கிறார்களா இல்லை பாஜகவிற்கு போய் விட்டார்களா என்று தேடும் நிலையில் அந்த கட்சியின் தலைவர்கள் இருப்பதாக கீதா ஜீவன் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

 கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவி திட்டம் முடக்கம்.! தமிழக அரசுக்கு எதிராக சீறும் அண்ணாமலை
 

Follow Us:
Download App:
  • android
  • ios