யார் செய்த சேட்டை.? கர்நாடக வளர்ப்பு மகனை கைது செய்ய வேண்டும்.! விமான விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் சவால்!
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை பயணிகள் சிலர் திறந்ததாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது .டிசம்பர் 10ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 7339 விமானம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்துள்ளது. இந்த விமானம் 10.05 மணிக்கு புறப்பட வேண்டியது. ஆனால் 142 நிமிடங்கள் தாமதமாக அதன்பின் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
திமுக நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக இரண்டு தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மீது புகார்களை வைத்தனர். இந்த நிலையில்தான் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.குறிப்பிட்ட விமானத்தில் பயணித்த குறிப்பிட்ட பாஜக பிரமுகர்கள் இருவரும் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க..ஆரம்பமே இப்படியா? பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பலுக்கு என்னாச்சு? உண்மை நிலவரம் என்ன?
இதுகுறித்து முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், ‘பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு.
கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை திருச்சி விமானத்தில் சென்ற 100 பயணிகள் உயிரையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதையும் படிங்க..பொங்கல் மது விற்பனை 400 கோடி.! தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ராமதாஸ் வேதனை
வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கைபார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு ட்விட்டர் பதிவில், மேலும், யார் செய்த சேட்டை ? எங்க ________ செய்த சேட்டை. நினைவிருக்கிறதா?
இது தேசிய குற்றம். பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அவர்கள் சட்டபூர்வமாக கைது செய்திருக்க வேண்டும் ஆனால் செல்வாக்கு அவர்களை காப்பாற்றியது.நேபாள விமான விபத்துக்குப் பிறகு இண்டிகோ விமான நிறுவனங்கள் கருணை காட்டாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!