வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக்கில் மது விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முக்கியமானதாக இருக்கிறது. சாதாரண நாட்களில் ரூ.75 கோடி முதல் ரூ.85 கோடி வரையிலும், விடுமுறை தினங்களில் ரூ.90 கோடி வரையிலும் மது விற்பனை நடைபெறுவது வழக்கம் ஆகும்.
மதுப்பிரியர்கள் பண்டிகையை வழக்கத்தை விட அதிகமாக மது அருந்தி கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதால் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் பண்டிகைக்கு முந்தைய நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும்.
இதையும் படிங்க..ஆசையாக பெரியப்பா மு.க அழகிரி வீட்டுக்கு போன உதயநிதி! மதுரையில் திடீர் சந்திப்பு.. குஷியில் உடன்பிறப்புகள் !!
ஆனால், இந்த விற்பனையானது தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில் அதிகரிக்கும்.பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள, குடிமகன்கள், நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபடுவது வழக்கம் தான். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையும் சேர்ந்து அதிகரித்தது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மது விற்பனை கடந்த வாரம் 13 ஆம் தேதி தொடங்கியது. பிறகு அதை தொடர்ந்து வந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் அதிகளவு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்களில் விசாரித்தோம். அதில் பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு திரைப்பட வசூலை மிஞ்சிய வசூலாக உள்ளது.
இதையும் படிங்க..ஆரம்பமே இப்படியா? பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பலுக்கு என்னாச்சு? உண்மை நிலவரம் என்ன?
அதன்படி, சனிக்கிழமை ரூ.250 கோடி, வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி என்றும்,ஞாயிற்றுக்கிழமை ரூ.450 கோடியை தாண்டி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால் மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பொங்கல் பண்டிகை மது விற்பனை ரூ.1000 கோடிக்கு மேல் இருக்க வாய்ப்பு என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக் வசூல் அதிகரித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!