ஆசையாக பெரியப்பா மு.க அழகிரி வீட்டுக்கு போன உதயநிதி! மதுரையில் திடீர் சந்திப்பு.. குஷியில் உடன்பிறப்புகள் !!
மதுரையில் முன்னாள் அமைச்சர் மு.க அழகிரியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரைக்கு இன்று வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் அமைச்சரும், தனது பெரியப்பாவுமான மு.க அழகிரியை சந்தித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு திமுகவில் தனது ஆதரவாளர்கள் மூலம் பலத்தை காட்ட முயன்ற முன்னாள் மத்தியஅமைச்சர் மு.க.அழகிரி, தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வர் ஆனபிறகு தற்போது அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!
நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். யாரும் எதிர்பாராத சந்திப்பு ஒன்று தற்போது நடந்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள அழகிரியின் இல்லத்தில் அவரை இன்று அவரை சந்தித்தார். அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது பெரியப்பாவான அழகிரியை முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார். அவரை வரவேற்க வீட்டு வாசலில் மு.க அழகிரி காத்திருந்தார்.
அங்கு இருந்த செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, பெரியப்பாவை பார்க்க மகன் வருகிறார் என்று பதில் அளித்திருந்தார் மு.க.அழகிரி. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மு.க அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பானது அரசியல் வட்டாரங்களில் குறிப்பாக திமுகவில் மகிழ்ச்சியை உண்டாகியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
இதையும் படிங்க..கடைசியாக கடவுளை சந்தித்துவிட்டேன்.! நெகிழ்ந்த எஸ்.எஸ் ராஜமௌலி.. யார் தெரியுமா அது.?
இதையும் படிங்க..நான் பைத்தியமா? Y பிரிவு பாதுகாப்பு போதாதா.? அண்ணாமலைக்கு சவால்விட்ட காயத்ரி ரகுராம்!