நான் பைத்தியமா? Y பிரிவு பாதுகாப்பு போதாதா.? அண்ணாமலைக்கு சவால்விட்ட காயத்ரி ரகுராம்!

நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராமுக்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மோதல் தொடர்ந்து வருகிறது.

Gayathri Raghuram slams bjp annamalai

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வகித்து வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம்.

இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பாஜகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்தார்.காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது.

Gayathri Raghuram slams bjp annamalai

இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!

இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த இரண்டு வருடங்களில் கர்நாடகா வாரிசு சக்தி வார்ரூம் யூடியூப் மூலம் பல லட்சங்கள் கோடிகளை செலவழித்து பாஜகவிற்குள் நுழைந்துள்ளது. எனது ட்வீட்களுக்கு எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் மற்றும் தனியார் டிவி பேட்டியில் பதில் இல்லாமல் அண்ணாமலை தனது கதறலை வார்ரூம் மூலம் அவிழ்த்துவிட்டார்.

இப்போது அண்ணாமலையின் வார்ரூம் என்னை திமுக ஸ்லீப்பர் செல் என்று அழைக்க முடியவில்லை. அதனால் இப்போது அவர்கள் என்னை கெட்ட வார்த்தைகள் சொல்லியும், என்னை பைத்தியம் என்றும், என் பெண்மையை அவமானப்படுத்துகிறார்கள். சூப்பர் ஆ ஹிந்து தர்மத்தை மற்றும் சித்தாந்தத்தைப் பரப்புகிறார்கள்.

இதையும் படிங்க..TN BJP: தைரியமான பெண்! நம்பிக்கை முக்கியம்.. காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்த வானதி சீனிவாசன்!

பல உண்மையான காரியகர்த்தாக்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர், இப்போதும் கூட ஒவ்வொரு கட்சியிலும் பல தொண்டர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள்.. தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? ஒருமுறை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கொடுத்தால், தேசத்திற்காக உயிரை தியாகம் செய் கேலி செய்தார்கள்.

Gayathri Raghuram slams bjp annamalai

இப்போது வளர்ப்பு மகன் அழுதுகொண்டே கெஞ்சி Z பிரிவு பாதுகாப்பைக் கோரினார், வளர்ப்பு மகனுக்கு தந்தையால் இப்போது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது அச்சுறுத்தலுக்காக அல்ல, வீணான விளம்பரதாரர்களுக்காக. Y பிரிவு பாதுகாப்பு போதாதா?

ஏன் இவ்வளவு ஆடம்பரம்? தமிழ்நாட்டையே தமிழகம் என்று அழைக்க பெருமைமிக்க கன்னடருக்கு நம் பணத்தை வீணாக்குவதற்கு பதிலாக ஏழை எளிய சாமானியர்களுக்கு அதே பணத்தை செலவழித்திருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

இதையும் படிங்க..கடைசியாக கடவுளை சந்தித்துவிட்டேன்.! நெகிழ்ந்த எஸ்.எஸ் ராஜமௌலி.. யார் தெரியுமா அது.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios