பொங்கல் மது விற்பனை 400 கோடி.! தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ராமதாஸ் வேதனை
பொங்கலையொட்டி மது விற்பனை ரூ.400 கோடியாம். தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதால் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
இதனால் பண்டிகைக்கு முந்தைய நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த விற்பனையானது தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில் அதிகரிக்கும்.பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள, குடிமகன்கள், நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபடுவது வழக்கம் தான்.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையும் சேர்ந்து அதிகரித்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் டாஸ்மாக் மது விற்பனை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது வருத்தம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு. தமிழ்நாட்டில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி மது விற்பனை ரூ.400 கோடியாம். தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!
இதையும் படிங்க..ஆரம்பமே இப்படியா? பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பலுக்கு என்னாச்சு? உண்மை நிலவரம் என்ன?