From the India Gate: 2024 தேர்தலுக்கு குடும்ப கட்சி போட்ட பிளான் முதல்... தாய் கழகத்துக்கு செல்லும் தலைவர் வரை

இந்திய கேட்டில் இருந்து... அதிகாரத்தின் திரைமறைவுகளில் நிறைய விஷயங்கள் நடக்கும். கருத்துகள், சதிகள், அதிகார சித்து விளையாட்டுக்கள், அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதில் சண்டைகள் என்று ஏராளமாக தினமும் நடந்து வருகிறது. ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. . இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான மூன்றாவது எபிசோட்.

From the India Gate family party plan for the 2024 elections to the leader going to the mother association

உபியில் ஒன்று கூடும் குடும்ப கட்சி:

எல்லாம் நன்றாக இருக்கிறது. அதுவும் நன்றாகவே முடிகிறது. அகிலேஷ் யாதவ் குடும்பத்தில் நிலவும் அரசியல் ஏற்ற தாழ்வுகளும் இப்படித்தான் செல்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மாமா ஒருவர், திரும்பவும் தாய் கழகத்திற்கு செல்ல உள்ளார். கட்சியில் அவருக்கு முக்கிய பதவி காத்திருக்கிறது என்று கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்திய இடைத்தேர்தலில் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் இருந்து அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் சாதனை படைத்த வெற்றியால் இது சாத்தியமாகியிருக்கிறது. 

சமீபத்தில் மாமாவின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கி, மீண்டும் கட்சியில் சேருமாறு திறந்த அழைப்பு விடுத்தாராம் அகிலேஷ் யாதவ். 2024 ஆம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து சமாஜ்வாடி கட்சி என்ன செய்யப்போகிறது என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது. இதற்கு மாமா கை கொடுப்பாரா என்று அகிலேஷ் மண்டையை பிய்த்துக் கொள்ளாத குறையாக ஆவலாக இருக்கிறாராம்.

மீண்டும் தாய் கழகம்:

வாழ்க்கை ஒரு வட்டம் என்று கூறுவது போல, அரசியல் என்பதும் ஒரு வட்டம் என்று தான் சொல்ல தோணுகிறது. உபியை சேர்ந்த ஓம் பிரகாஷ் ராஜ்பார் மீண்டும் தனது தாய் கழகத்திற்கு செல்கிறார் என்றும், அதற்கு அவர் ரெடியாக இருக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அவர் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது, தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உண்மையை கொட்டினார். இந்த கசப்பான நிகழ்வு மீண்டும் நடக்காது என்று எப்படி கூற முடியும் என்று ஒரு கோஷ்டி குரல் எழுப்புகிறதாம். தூண்டிலை போட்டு இந்த பெரிய மீனை பிடித்தால், இந்த பெரிய மீன் எத்தனை சிறிய மீன்களை விழுங்குமோ என்று பயத்தில் உள்ளனராம். எப்படி பார்த்தாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த பெரிய மீனை விழுங்குவதற்கு கட்சிக்குள் திமிலங்கள் இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. அப்படியே இந்த பெரிய மீனை அடல் பிகாரி வாஜ்பாய் பவுண்டேஷனின் துணைத் தலைவர் பதவி கொடுத்து ஒதுக்கி விடலாமா என்றும் சிந்திக்கின்றனாராம்.

இதையும் படிங்க.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!

அசோக் கெலாட்டுக்கு திகில் காட்டிய தாமரை தலைவர்:

பாபா என்ற பெயர் ராஜஸ்தான் அரசாங்கத்தில் அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதாம். பாபா என்று அழைக்கப்படும் பாஜகவின் மூத்த தலைவர், எந்த அரசியல் நிகழ்வையும் எளிதாக மாற்றக்கூடியவராம். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பாபாவின் சதி வேலைகள் பாதித்துவிடுமோ ? என்று அஞ்சியிருக்கிறது அசோக் கெலாட் அரசு.

பாபாவின் தொகுதியில் சாலைகளை மேம்படுத்தவும், கேமராக்கள் பொருத்தவும், சமுதாயக் கட்டிடங்களை சீரமைக்கவும் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவிட்டதாம். ஆனாலும் அந்த பாபா தன்னுடைய வேலையை காட்டிவிட்டார் என்று கை கட்சி புலம்பி வருகிறது.

கேரளாவில் ரெட் கார்டு விழுகுமா?:

எல்.டி.எப் அமைப்பாளரும் முதல்வர் பினராயின் நம்பிக்கைக்குரியவருமான ஈ.பி.ஜெயராஜன் அனைத்துக் கட்சி  கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  இது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. சிபிஎம் செயலாளராக எம்.வி.கோவிந்தன் உயர்த்தப்பட்டதற்கு எதிராகத்தான் கூட்டத்தில் ஈ.பி.ஜெயராஜன் கலந்து கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

கட்சியின் இரும்புத் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறதுன்னே யாருக்கும் தெரியலைப்பா என்று கூறுவதைப் போல  கண்ணூரில் வலிமையாக இருக்கும் பி.ஜெயராஜன், மாநிலக் குழுவில் தனது உறவினரும் சமகாலத்தவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பி ஒரு அறிக்கையை கொடுத்ததாகத் தெரிகிறது.

நேர்மை மற்றும் கம்யூனிச நெறிமுறைகளுக்கு பெயர் பெற்றவர் பி ஜெயராஜன். கேரளாவில் ஆயுர்வேத ரிசார்ட் திட்டத்தில் ஈபியும் அவரது மகனும் தலையிட்டதாக பி ஜெயராஜன் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. சிபிஎம் மத்திய குழுவும் இதுதொடர்பாக அறிக்கை கேட்டு இருக்கிறதாம். மிகவும் சக்திவாய்ந்த ஈ.பி.ஜெயராஜனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்படுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குறிப்பு: ஈபி, பி, எம்வி ஆகிய மூவரும்தான் வட கேரளாவில் கட்சிக்கு தூண்களாக இருக்கின்றனர். கண்ணூர் பகுதியிலும் கட்சியின் பாலமாக இருக்கின்றனராம். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து இருப்பது தலைமையை கவலையில் ஆழ்த்தி உள்ளதாம். இது எதிர்காலத்தில் கட்சியின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது உதயநிதி ஸ்டாலினுக்கும் நடக்கும் ; அண்ணாமலை சொன்ன பிளாஷ்பேக் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios