நடிகர் விஜய் அவசரப்பட்டு அரசியலுக்கு வந்து விட்டார்.! அதிமுக, திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை-கதிரவன் அதிரடி

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், விஜயின் அரசியல் வருகையால் திமுக மற்றும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என பார்வேடு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

Forward Bloc Kathiravan said that AIADMK and DMK will not be affected by actor Vijay political entry KAK

விஜய் அரசியல் வருகை- தலைவர்கள் ஆதரவு

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லையென தெரிவித்த விஜய், சட்ட மன்ற தேர்தலில் களத்தில் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இணிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல அரசியல் தலைவர்களும் விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பார்வேடு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், விஜய்யின் அரசியல் வருகைக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

Forward Bloc Kathiravan said that AIADMK and DMK will not be affected by actor Vijay political entry KAK

அவசரப்பட்டு விஜய் எடுத்த முடிவு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பார்வேடு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், பாராளுமன்றத் தேர்தலுக்கு 3 பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க பொதுச் செயலாளரான எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் எங்களை மதிக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என கூறிய அவர், தேனி, அல்லது இராமநாதபுரம் தொகுதிகளை கேட்போம் என தெரிவித்தார்.  

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு பதில அளித்த அவர், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி துவங்கியுள்ளார். அவர் அவசரப்பட்டு முடிவு எடுத்திருப்பதாக வே நினைக்கிறேன். விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதால் திமுக, அதிமுக விற்கு பாதிப்பு இல்லையென கூறினார்.

இதையும் படியுங்கள்

கூட்டணியில் இழுபறி.! 12 மக்களவை தொகுதி, 1 ராஜ்ய சபா சீட் கேட்கும் பாமக... பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios